மணிரத்னம்கிட்ட நான் அப்படி பண்ணிருக்கவே கூடாது, எல்லாம் என் தப்புதான்- மனம் நொந்துப்போன ஸ்ரீகாந்த்…
Author: Prasad15 April 2025, 1:30 pm
சரிவை கண்ட நடிகர்
“ரோஜா கூட்டம்” திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் ஸ்ரீகாந்த். இவர் நடிக்க வந்த புதிதில் ஒரு சாக்லேட் பாயாக பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு இவரது திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை.

கெரியரின் தொடக்கத்தில் இருந்தே பல தடைகளை கண்டவர் ஸ்ரீகாந்த். இவர் முதலில் நடித்த திரைப்படம் “ரோஜா கூட்டம்” என்றாலும் அதற்கு முன்பே ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஒரு திரைப்படத்தில் நடித்தார். அத்திரைப்படம் ஒரே நாளில் டிராப் ஆனது. அதனை தொடர்ந்து அவர் நடித்து முதலில் வெளிவந்த “ரோஜா கூட்டம்” திரைப்படத்திலும் பல தடைகள் வந்தது. அது எல்லாவற்றையும் தாண்டிதான் அத்திரைப்படம் வெளிவந்தது. இந்த நிலையில் மணிரத்னமிடம் தான் நடந்துகொண்ட தவறான விதம் பற்றி சாய் வித் சித்ரா பேட்டியில் பகிர்ந்துகொண்டுள்ளார் ஸ்ரீகாந்த்.
எல்லாம் என் தப்புதான்…
அதாவது ஸ்ரீகாந்த் “மனசெல்லாம்” திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோது படப்பிடிப்புத் தளத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணத்தால் அவர் பல மாதங்கள் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அத்திரைப்படத்தில் நடிக்கும்போதே மணிரத்தினத்தின் “ஆயுத எழுத்து” திரைப்படத்தில் நடிப்பதற்காக ஸ்ரீகாந்த் ஒப்பந்தமாகியிருந்தார்.
ஆனால் “மனசெல்லாம்” திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரனிடம் ஸ்ரீகாந்த் ஒப்பந்தம் போட்டிருந்தார். அதனால் அவர் அத்திரைப்படத்தை முடித்துவிட்டுத்தான் மணிரத்னம் படத்தில் நடிக்க வேண்டும் என கண்டிஷன் போட்டாராம். மணிரத்னம் பல மாதங்கள் ஸ்ரீகாந்திற்காக படப்பிடிப்பு நடத்தாமல் காத்துக்கொண்டிருந்தாராம். அதனால் ஸ்ரீகாந்தின் மேனேஜர் மணிரத்னம் படத்திற்காக வாங்கிய அட்வான்ஸை திருப்பிக்கொடுத்துவிட்டாராம். இந்த சம்பவங்கள் எதுவும் ஸ்ரீகாந்துக்கு தெரியாதாம்.

ஸ்ரீகாந்த் மருத்துவமனையில் இருக்கும்போது மணிரத்னம் தினமும் மலர் செண்டு அனுப்பி வைப்பாராம். அதன் பின் ஒரு நாள் மலர் செண்டு அனுப்புவதை அப்படியே நிறுத்துவிட்டாராம். என்ன என்று விசாரித்தபோதுதான் அட்வான்ஸை திருப்பிக்கொடுத்த விஷயம் ஸ்ரீகாந்துக்கு தெரிய வந்ததாம்.
“என் மீதுதான் தவறு. என்னுடைய கவனத்திற்கு இது முதலிலேயே வந்திருந்தால் நான் தயாரிப்பாளரிடம் பேசி சம்மதம் வாங்கியிருப்பேன். எனக்காக மனிதாபிமானத்துடன் மணிரத்னம் காத்திருந்தார். ஆனால் ஆயுத எழுத்து படத்தில் நடிக்கவில்லை என்று நான் சொல்ல வேண்டிய நல்ல முறையில் அவரிடம் சொல்ல முடியவில்லை. அதுதான் மணிரத்னம் சாரை புண்படுத்திவிட்டது” என்று அப்பேட்டியில் மன வருத்ததுடன் பகிர்ந்துகொண்டா ஸ்ரீகாந்த்.
