கடுப்பான சிறுத்தை சிவா; கூல் ஆக்கிய நடிகை திரிஷா

Author: Sudha
3 July 2024, 6:26 pm

த்ரிஷா தமிழ் திரையுலகில் நடிக்க வந்து 20 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அதே பொலிவுடன் அழகுடனும் ஜொலிக்கிறார் திரிஷா. மனசெல்லாம் திரைப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்தவர் ஸ்ரீகாந்த்

மனசெல்லாம் 2003 ம் ஆண்டு வெளிவந்தது.சந்தோஷ் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இசைஞானி இளையராஜா இத்திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.2003 ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்பட்டது. இத்திரைப்படம் தெலுங்கில் ‘மனசந்தா’ எனும் பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

ஶ்ரீகாந்த், த்ரிஷாவை பற்றி ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார். தன்னை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் எவ்வாறு உடலை கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு உதாரணம் த்ரிஷா தான். அவர் எல்லோருக்கும் ஒரு பெரிய இன்ஸ்பிரேஷன்

அன்று 21 வருடம் முன்பு மனசெல்லாம் திரைப்படத்தில் எப்படிப் பார்த்தேனோ அப்படியேதான் இப்போதும் இருக்கிறார் என தெரிவித்தார்.

மனசெல்லாம் திரைப்படத்தின் போது நடந்த ஒரு
சுவாரசியமான தகவலையும் சொல்லியிருக்கிறார். அப்போது த்ரிஷாவுக்கு தமிழ் தெரியாது எப்போதும் போனில் பேசிக் கொண்டிருப்பார் அத்திரைப்படத்தில் உதவி இயக்குனராக சிறுத்தை சிவா பணியாற்றிக் கொண்டிருந்தார்.
திரிஷா போனும் கையுமாக மிக உற்சாகமாக பேசிக் கொண்டிருப்பதை பார்த்த அவர் கோபப்பட்டு ஒரு ஹீரோ உன்னை நினைச்சு அழுதுட்டு இருக்கான் நீ இப்படி போன்ல பேசிட்டு இருக்கே என்றார். அதற்கு கோபப்படாத திரிஷா கூல் கூல் என்று சொல்லி அவரையும் சாந்தப்படுத்தினார் எதையும் ஈசியாக எடுத்துக் கொள்ளும் இந்த குணம் த்ரிஷாவை இன்னும் அழகாக்கியது என குறிப்பிட்டுள்ளார். சிறுத்தை சிவா அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி