பிரம்மாண்ட படத்தில் நடிக்க முடியாதபடி பண்ணிட்டாங்க? பிரபல ஹீரோவை கைகாட்டும் ஸ்ரீநிதி ஷெட்டி…

Author: Prasad
26 April 2025, 3:41 pm

கேஜிஎஃப் கதாநாயகி

யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார். அதனை தொடர்ந்து தமிழில் “கோப்ரா” திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்போது தெலுங்கில் நானியுடன் இணைந்து “HIT:The Third Case” திரைப்படத்தில் நடித்துள்ளார். 

srinidhi shetty not able to act in ramayana movie because of yash

இத்திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஆதலால் இத்திரைப்படத்திற்கான புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கியுள்ளனர். 

பிரம்மாண்ட  இராமாயணம் 

ரன்பீர் கபூர், சாய் பல்லவி ஆகியோரின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் “இராமாயணம்”. ரன்பீர் கபூர் ராமராகவும் சாய் பல்லவி சீதையாகவும் நடித்து வரும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது. இதில் இராவணனாக யாஷ் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் முதல் பாகம் 2026 ஆம் ஆண்டும் இரண்டாம் பாகம் 2027 ஆம் ஆண்டும் வெளிவரவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற “HIT: The Third Case” திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்ரீநிதி ஷெட்டி, “இராமாயணம்” திரைப்படத்தில் தன்னைத்தான் முதலில் சீதையாக தேர்வு செய்தார்கள் என கூறியுள்ளார். அதாவது “இராமாயணம்” திரைப்படத்தின் சீதை கதாபாத்திரத்திற்கான ஆடிஷனுக்கு ஸ்ரீநிதி ஷெட்டி சென்றிருந்தாராம்.

srinidhi shetty not able to act in ramayana movie because of yash

அவர் நடித்து காட்டிய விதம் இயக்குனருக்கு பிடித்திருந்ததாம். ஆனால் இத்திரைப்படத்தில் இராவணனாக யாஷ் நடிக்கிறார் என்பதால் இருவரின் கெமிஸ்ட்ரியும் சரிவராது என்று முடிவு செய்து “இராமாயணம்” படத்தில் இருந்து ஸ்ரீநிதி விலகிவிட்டாராம். 

“கேஜிஎஃப்” திரைப்படத்தில் யாஷும் ஸ்ரீநிதியும் கண்கவர்ந்த காதல் ஜோடியாக நடித்திருந்தனர். இதன் காரணமாக கூட “இராமாயணம்” திரைப்படத்தில் கெமிஸ்ட்ரி ஒத்துவராது என அவர் சிந்தித்திருக்கலாம் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.  

  • the reason behind sundar c production company logo comes in mookuthi amman 2 poster ராசி முக்கியம் பிகிலு? மூக்குத்தி அம்மன் 2 படத்தில் சுந்தர் சி பெயர் வந்ததுக்கு இப்படி ஒரு காரணமா?
  • Leave a Reply