அம்மா சொன்ன அந்த ஒரு வார்த்தை.. கோபப்பட்டு சென்ற கமல்; காதல் முறிவு குறித்து பேசிய பிரபல நடிகை..! (வீடியோ)
Author: Vignesh1 January 2024, 4:23 pm
உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னாளில் மிகப்பெரிய நடிகராக பெரும் புகழ் பெற்றார். நடிகர், திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக ஜெயித்து காட்டுவார்.
திறமை, நடிப்பு என எல்லாவற்றையும் தாண்டி சினிமாவில் சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு லீலைகளில் சிக்கி வருகிறார். அப்படித்தான் இவர் நடிகை ஸ்ரீவித்யா உடன் நெருங்கி பழகி வந்தார் . கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவும் இணைந்து நடித்த முதல் திரைப்படம் ” சொல்லத்தான் நினைக்கிறேன்”. அதன் பின்னர் செல்லுலாய்டில் பூத்த களாசிக் காதல், அபூர்வ ராகங்கள் உள்ளிட்ட தொடர் ஹிட் படங்களில் நடித்து ரகசிய உறவில் நெருக்கமாக பழகி வந்தார்கள். இருந்தாலும் கமல் நாங்கள் நண்பர்கள் மட்டும் தான், ” அவள் இறந்தாலும் இறவா நட்பு” என்றெல்லாம் கூறியுள்ளார்.
இதனிடையே ஸ்ரீவித்யா கடந்த 2006 -ம் ஆண்டு புற்று நோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவர் உயிர் பிரியும் நேரத்தில் தன்னை சந்திக்க நினைத்த யாரையும் பார்க்க விரும்பவில்லை என கூறி மறுத்த அவர் கமலை மட்டும் தான் இறப்பதற்குள் ஒரு முறையாவது பார்த்துவிடவேண்டும் என ஏங்கினாராம். விஷயமறிந்து ஸ்ரீவித்யாவை பார்க்க சென்ற கமல் கட்டிப்பிடித்து கதறி அழுதாராம். அவர்களின் உறவு அவ்வளவு புனிதமானதாக இருந்ததாம்.
இந்நிலையில், ஸ்ரீவித்யா உருக்கமாக பேசிய மலையாள பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசி இருக்கிறார். அந்த பேட்டியில், பேசும்போது ஸ்ரீவித்யா நாங்கள் பழகியது அனைவருக்குமே தெரியும் என்றும், இரு வீட்டாரும் நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என விரும்பியதாக குறிப்பிட்ட ஸ்ரீவித்யா. ஆனால், ஒரு நாள் எனது தாயார் கமலிடம் பேசியது அவருக்கு மன வருத்தத்தை கொடுக்க அவர் என்னிடம் நீண்ட காலமாக பேசவில்லை என குறிப்பிட்டார்.
மேலும், அதன் பிறகு பெரிய இடத்திற்கு சென்று கமல் ஒருநாள் மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என்று செய்தியை தெரிந்து கொண்ட நான் என்ன செய்வது என்று தெரியாத நிலைக்கு சென்று, அதை கூறி மொத்தமாக கமலை இழந்ததாக ஸ்ரீவித்யா நினைவு கூர்ந்து உள்ளார். அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
I Lost Him Forever 💔 pic.twitter.com/55O0leqRff
— Monkey Cinema (@monkey_cinema) December 31, 2023