5 முறை NO சொல்லியும் விடாமல் வற்புறுத்திய பிரபலம்.. உண்மையை வெளியிட்ட விஷாலின் அண்ணி ஸ்ரியா ரெட்டி..!

Author: Vignesh
3 January 2024, 1:53 pm

நடிகர் விக்ரமின் சாமுராய் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகியவர் நடிகை ஸ்ரியா ரெட்டி. இதன்பின் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். நடிகர் விஷாலின் திமிரு படத்தில் வில்லியாக நடித்து மிரட்டி இருப்பார்.

shriya reddy - updatenews360

ஏலேய் இசுக்கு என்று டயலாக் பெரியளவில் பேசப்பட்டது. இதையடுத்து விஷாலின் அண்ணன் விக்ரம் கிருஷ்ணாவை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகி குழந்தையை பெற்று பார்த்து கொண்டார். மீண்டும் சினிமாவில் நடிக்க அண்டாவ காணோம் படம் மூலம் ரீஎண்ட்ரி கொடுத்தார். அவ்வப்போது, இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரியா ரெட்டி, தோழிகளுடன் இணைந்து கிளாமர் போட்டோஷூட் பார்ட்டி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

sriya-reddy

சமீபத்தில், கூட சுழல் என்ற படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றார். இயக்குனர் புஷ்கர் காயத்ரி எழுதி பிரம்மா ஜி அருசரண் முருகையா இயக்கத்தில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்ற சுழல் படத்தில் நடித்த அனுபவம் குறித்து ஸ்ரியா ரெட்டி, தற்போது பேட்டி ஒன்றில் பகிர்ந்து இருக்கிறார். சுழல் படத்திற்காக ஐந்து முறை வேண்டவே வேண்டாம் எனக் கூறினேன். ஆனால், புஷ்கர் காயத்ரி எனக்கு கதை குறித்து விளக்கம் பற்றி பெரிய அளவில் மெயில் செய்து அனுப்பினார். அந்த மெயில் கடைசியில் நீங்கள் எப்படி நோ சொன்னீர்கள் என்று தெரிவித்திருந்தார். அதன் பின் தான் ரெஜினா கதாபாத்திரத்தில் நடித்ததாக தெரிவித்துள்ளார்.

  • DD Neelakandan viral video ஸ்காட்லாந்தில் ‘காதல்’ நாயகன்…டிடி வெளியிட்ட ரொமான்டிக் வீடியோ…குவியும் வாழ்த்து.!