வாடகை வீட்டில் ‘ஷாருகான்’…சொந்த வீட்டில் இருந்து வெளியே வர காரணம் என்ன.!

Author: Selvan
22 February 2025, 5:58 pm

பல லட்சங்கள் கொடுத்து வாடகை வீட்டில் ஷாருகான்

சினிமாவில் நடிகர்,நடிகைகள் நடிக்க ஆரம்பித்த சில காலங்களில் முக்கிய நகரங்களில் பிரமாண்ட வீடுகள் வாங்குவது வழக்கம்,அந்த வகையில் பல பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பை சிட்டியில் சகல வசதிகள் கொண்ட வீடுகளில் வசித்து வருகிறார்கள்.

இதையும் படியுங்க: அரசியல் புள்ளியால் கேள்விக்குறியாகும் படம்..பரிதவிப்பில் ஸ்டார் நடிகையின் கணவர்.!

அந்த வரிசையில் பாலிவுட்டின் பிரபல ஸ்டாரான ஷாருக்கான் ‘மன்னத்’ என அழைக்கப்படும் பிரமாண்ட வீட்டில் இருந்து வெளியேறி,வாடகை வீட்டில் குடியேற உள்ளார் என்ற தகவல் வந்துள்ளது.இவருடைய மன்னத் வீட்டில் எப்போதும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதும்,ஆனால் இனிமேல் அதற்கு எதிர்மறையாக வெறிச்சோடி மட்டுமே காட்சியளிக்க உள்ளது,காரணம் இந்த வீட்டை சீரமைக்கும் பணிகளை ஷாருக்கான் மேற்கொள்ள உள்ளார்.

Shah Rukh Khan Mumbai house update

தற்போது ஆறு மாடி உள்ள இந்த பிரமாண்ட வீட்டை 8 மாடி கட்டிடமாக மாற்ற மஹாராஷ்டிரா கடலோர மண்டல மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கோரியுள்ளார்,இதனால் தற்போதைக்கு தன்னுடைய குடும்பத்தோடு வாடகை வீட்டில் 3 ஆண்டுகள் தங்க முடிவு எடுத்துள்ளார்.

இந்த வீட்டின் மாத வாடகை மட்டும் கிட்டத்தட்ட 24.15 லட்சம் என கூறப்படுகிறது,3 வருடத்திற்கு 9 கோடி ரூபாய் வாடகை செலுத்த உள்ளார்,இந்த பிரமாண்ட வீடு பாலிவுட் நடிகர் ஜாக்கி பாக்கானிக்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vijay TV serial actress love with CSK Player சிஎஸ்கே வீரருடன் காதல்.. இலங்கை மருமகளாகும் விஜய் டிவி சீரியல் நடிகை?!