சாமி… ஜவான் படம் எப்படியாவது ஹிட் ஆகிடனும் – திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த நயன்தாரா – ஷாருக்கான்!

Author: Shree
5 September 2023, 1:40 pm

தமிழ் சினிமாவின் இளம் ஹிட் இயக்குனரான அட்லீ ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தொடர் ஹிட் திரைப்படங்களை இயக்கி புகழ் பெற்றார். தற்போது பாலிவுட் நட்சத்திர நடிகரான ஷாருக்கானை வைத்து ஜாவான் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக ஷாருக்கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் முன்பதிவிற்கான டிக்கெட்டுகள் விற்பனையாகி வருகிறது. படத்தின் ப்ரோமோஷன்கள் படு பிசியாக நடைபெற்றது.

இந்நிலையில் நயன்தாரா ஷாருக்கான், விக்னேஷ் சிவன் , ஷாருக்கான் மகன் சுஹானா கான் உள்ளிட்டோர் திருப்பதியில் ஸ்வாமி தரிசனம் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஜவான் படம் வெற்றிபெறவேண்டும் என்ற வேண்டுதலோடு நேற்றிரவு திருப்பதிக்கு சென்ற அவர்கள் அங்கேயே தங்கி இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் சாமி தரிசனம் செய்தனர். அவர்களை பார்த்ததும் மக்கள் கூட்டம் அலைமோத ஷாருக்கான் , நயன்தாரா பதற்றத்தோடு வேகமாக ஓடி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்