வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை
சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது. இது ரசிகர்கள் மற்றும் திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்க: அடிச்சு நொறுக்கிய பூரான்..இதுவரை யாரும் செய்யாத ரெகார்ட்…!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “சிறகடிக்க ஆசை” சீரியலில் நடித்து புகழ் பெற்றவர் ஸ்ருதி நாராயணன். இந்த வீடியோ தொடர்பாக எந்த பதிலும் கூறாமல் இருந்த அவர், தற்போது இன்ஸ்டாகிராம் மூலம் கடுமையான பதிலை வெளியிட்டுள்ளார்.
நடிகை ஸ்ருதி நாராயணன் இந்த வீடியோ பற்றி கூறும்போது “இந்த வீடியோ முழுக்க முழுக்க AI தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஃபேக் வீடியோ” என தெரிவித்துள்ளார்.இதை உருவாக்கியவர்களும்,பரப்பியவர்களும் கடுமையான தண்டனை பெற்றே ஆக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அவருடைய இன்ஸ்டா ஸ்டோரியில் இந்த மாதிரி வீடியோ பரப்புவர்களுக்கு எத்தனை ஆண்டு தண்டனை மற்றும் அபராதம் எவ்ளோ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஒரு மனிதரின் வாழ்க்கை உங்களுக்கு பொழுதுபோக்கல்ல.நான் மிகவும் கடினமான நேரத்தை கடந்து செல்கிறேன்.நானும் ஒரு பெண் தான்.எனக்கும் உணர்வுகள் உண்டு.இதை வேடிக்கையாக பார்க்காதீர்கள்.உங்களது தாய்,சகோதரி, காதலியை நினைத்து பாருங்கள்.அவர்களுக்கும் என்னைப் போலவே உடல்தான் உள்ளது” என ஆவேசமாக பதிலளித்துள்ளார்.