சினிமா / TV

உங்கள் கணவர் செய்தது மட்டும் நியாயமா? நயன்தாராவுக்கு எஸ்.எஸ்.குமரன் கேள்வி!

LIC என்ற தலைப்பை விக்னேஷ் சிவன் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை நயன்தாராவாகிய நீங்கள் அறிந்திருப்பீர்கள் என தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கூறி உள்ளார்.

சென்னை: இது தொடர்பாக இயக்குனரும், தயாரிப்பாளருமான எஸ்.எஸ்.குமரன் வெளியிட்ட அறிக்கையில், “மூன்று வினாடிக் காட்சிக்காக நஷ்ட ஈடு கேட்டு தனுஷ் உங்கள் மீது வழக்கு தொடர்ந்தற்காய் வெகுண்டு எழுந்த நீங்கள், கடந்த ஆண்டு LIC என்ற என் தலைப்பை உங்கள் கணவர் விக்னேஷ் சிவன் என் அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதை அறிந்திருப்பீர்கள்.

LIC என்ற தலைப்பு என் நிறுவனத்தின் பெயரில் இருப்பதை அறிந்த விக்னேஷ் சிவன், தன் மேலாளர் மூலம் என்னிடம் கேட்டு, நான் வழங்காத நிலையிலும் அதே தலைப்பை அவர் படத்திற்கு வைத்து விளம்பரப்படுத்தியது எந்த வகையில் நியாயம்?

என் கதைக்கும், அந்தத் தலைப்பிற்கும் பிரிக்க முடியாத ஒற்றுமை இருப்பதால் LIC என்ற தலைப்பை வழங்க முடியாத சூழல் இருக்கிறது என்று நேர்மையான முறையில் பதில் அளித்தும், அதிகாரத் தன்மையுடன் அதே தலைப்பை தன் படத்திற்கு விக்னேஷ் சிவன் வைக்கிறார் என்றால், ‘உன்னால் என்ன பண்ண முடியும்’ என்ற அதிகார நிலை தானே காரணமாய் இருக்க முடியும்.

அதற்கு எந்தக் கடவுள் மன்றத்தில் விக்னேஷ் சிவனைப் பதில் சொல்ல சொல்வீர்கள். உங்களை விட பலம் பொருந்தியவர்கள் என்றால் இரண்டு வருடம் பொறுமையோடு பயன்படுத்த அனுமதி கேட்கும் நீங்கள், எளிய சிறிய படைப்பாளியான என்னிடம் எதேச்சதிகாரதோடு நடந்துக் கொண்டு, என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்.

இப்பொழுது வரை அந்தத் தலைப்பினால் ஏற்பட்ட மன உளைச்சல் என்னைப் பாதித்துக் கொண்டிருக்கிறது. என் படத்தையும் அது பாதிப்படையச் செய்திருக்கிறது. எந்தப் படைப்பாளியும் தன் படைப்பை பல காரணங்களோடும், பல பொருட்செலவோடும் தான் கட்டமைக்கிறார்கள்.

நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்திற்காக அதைப் பயன்படுத்தும் பட்சத்தில் முறையான அனுமதி யோடும் முறையான மதிப்பூதியத்தோடும் பயன்படுத்த வேண்டும் என்ற அறத்தைக் கொள்ள வேண்டும். நீங்கள் இங்கு எதையும் இலவசமாகச் செய்யவில்லை.

எங்கள் படப்புகளை மட்டும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பதன் மூலம் படைப்பூலகதிற்கு மிக மோசமான வழிக்காட்டியாக நீங்களும் உங்கள் கணவரும் இனங்காட்டப்படுவீர்கள் என்பதை நினைவில் கொள்க” எனத் தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: 9 வருடங்களாக நயன்தாராவை பழிவாங்கும் தனுஷ்…. பிரச்சனையின் பின்னணி இது தான்!

முன்னதாக, கடந்த 2022ஆம் ஆண்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் – நடிகை நயன்தாரா திருமணம் செய்து கொண்ட நிகழ்வை, Nayanthara – Beyond the story tale என்ற பெயரில் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆவணப்படமாக வெளியிட திட்டமிட்டு இருந்தனர். இதில், இடையில் தாமதம் ஏற்பட்டது. இதனையடுத்து, நவம்பர் 18ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

இந்த நிலையில் இப்படத்தில் நானும் ரெளடிதான் படத்தின் 3 வினாடி காட்சிகளைப் பயன்படுத்த தனுஷிடம் அனுமதி கேட்டதற்கு 10 கோடி ரூபாய் கேட்டதாக நயன்தாரா இன்று கடுமையான குற்றச்சாட்டை முன் வைத்து இருந்தார். மேலும், விக்னேஷ் சிவன் அந்த காட்சியையும் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

உதயநிதிக்கு மட்டும் No தடா.. அடித்துச் சொல்லும் இபிஎஸ்!

முடிந்தவரை காவல்துறை, காவலர்களையாவது காப்பாற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். சென்னை: தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட்…

34 minutes ago

முரட்டு கம்பேக்கா அமைந்ததா ‘வீர தீர சூரன்’..சூர ஆட்டம் காட்டினாரா விக்ரம்..படத்தின் விமர்சனம்.!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சியான் விக்ரம் நடித்துள்ள "வீர தீர சூரன் பாகம் 2" திரைப்படம் நீண்ட எதிர்பார்ப்புக்கு…

1 hour ago

மோசடியில் செல்வப்பெருந்தகை அண்ணன் மகன்? திமுகவுக்கு தெரியாமலா? அண்ணாமலை பரபரப்பு குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்களைத் தொழில் முனைவோர் ஆக்குகிறோம் என்ற பெயரில் மாபெரும் ஊழலை செல்வப்பெருந்தகை அரங்கேற்றியிருப்பதாக அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். சென்னை:…

1 hour ago

நழுவிய செந்தில் பாலாஜி.. காத்திருக்கும் ED.. பாஜக செக்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்குகளை சேர்த்து விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.…

2 hours ago

யாரும் இத மட்டும் பண்ணிராதீங்க..மனோஜ் இறந்ததற்கு காரணம் வேற..தம்பி ராமையா உருக்கம்.!

தம்பி ராமையாவின் உருக்கமான கருத்து தமிழ் திரைப்பட உலகில் தனித்துவமான பணியைச் செய்து வந்த நடிகரும்,இயக்குநருமான மனோஜ் பாரதிராஜா,திடீர் மரணமடைந்த…

2 hours ago

கலங்கி நின்ற விவசாயி.. கூண்டோடு வந்த வனத்துறை.. கோவையில் தொடரும் சிறுத்தை அச்சம்!

கோவையின் மதுக்கரை அடுத்த பகுதியில் ஆட்டைக் கொன்ற சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். கோயம்புத்தூர்: கோவை…

3 hours ago