ராஜமௌலி தொடர் டார்ச்சர்…திருமணமே ஆகல…பிரபலம் தற்கொலை முடிவு.!

Author: Selvan
1 March 2025, 9:05 pm

நண்பர் ஸ்ரீனிவாசா ராவின் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டு!

பிரபல இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி மீது அவரது நீண்டகால நண்பர் எனக்கூறும் திரைப்படத் தயாரிப்பாளர் உப்பலபதி ஸ்ரீனிவாச ராவ் அதிர்ச்சிகரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதையும் படியுங்க: ‘கூலி’ அடிபோலி…1000 கோடி உறுதி…சவால் விட்ட இளம் நடிகர்.!

ஸ்ரீனிவாசா, மேட்டுக்குடா காவல் நிலையத்திற்கு எழுதிய கடிதம் மற்றும் வெளியிட்ட வீடியோ மூலம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 1990 முதல் ராஜமௌலியை அறிந்திருப்பதாகவும், தனது வாழ்க்கையை அழித்துவிட்டதாகவும், கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

Uppalapati Srinivas Rao allegations

மூன்று நபர்களுக்கு இடையேயான காதல் பிரச்சனையே இதற்குக் காரணம் என்றும், தனது தற்கொலை முயற்சிக்கு ராஜமௌலியே முழு காரணம் என்றும் அவர் அந்த வீடியோவில் குற்றஞ்சாட்டியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜமௌலியின் ‘யமடோங்கா’ படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய ஸ்ரீனிவாசா, தனது வீடியோவில், எம்.எம். கீரவாணி, சந்திரசேகர் யெலெட்டி, ஹனு ராகவபுடி உள்ளிட்ட பலருக்கும், ராஜமௌலியுடன் தனக்கு இருந்த நெருக்கத்தைப் பற்றி தெரியும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 55 வயதிலும் இன்னும் தனிமையில் இருப்பதற்கு ராஜமௌலிதான் காரணம் என்றும், தங்களுக்குள் ஒரு பெண் வரக்கூடும் என்று ஒருபோதும் நினைக்கவில்லை என்றும், தற்கொலை செய்யத் தவிர வேறு வழியில்லை என்றும் அவர் வேதனையுடன் கூறியுள்ளார்.

இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக ராஜமௌலி தரப்பில் இதுவரை எந்த பதிலும் வெளிவராததால், இந்த விவகாரம் மேலும் சிக்கலாகியுள்ளது.

  • Sundar C new movie மார்க்கெட்டே இல்லை…சுந்தர் சி-யிடம் சரணடைந்த வாரிசு நடிகர்.!
  • Leave a Reply