10 பாகங்கள் ஆக உருவாகும்”மகாபாரதம்” … ராஜமௌலின் அடுத்த பிரமாண்ட சம்பவம்!

Author: Shree
11 May 2023, 8:14 am

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி பாகுபலி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகத்தை உலக வரைபடத்தில் கொண்டு வந்த மேவரிக் இயக்குனர் என புகழ் பாராட்டப்பட்டார். வரலாற்று கதையம்சம் கொண்டு உருவான பாடம் இரண்டு பாகங்களாக வெளியாகி சரித்திர சாதனை படைத்தது. ஒருவவொரு காட்சியையும் செதுக்கி செதுக்கி உருவாக்கிய ராஜமௌலி பிரம்மாண்ட படைப்பாளியாக முத்திரை குத்தப்பட்டார்.

அதன் மாபெரும் வெற்றியை அடுத்து தற்போது அதே சாயலில் மகாபாரத கதையை படமாக்க உள்ளார். இது அவரது ” நாள் கனவுத் திட்டம்” என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய ராஜமௌலி .”இதற்கு முன்பு மக்கள் பார்த்த அல்லது படித்த கதாபாத்திரங்கள் நான் எடுக்கப்போகும் இந்த திரைப்பட மகாபாரதத்தில் இருக்காது.

உண்மை கதையில் மாற்றமில்லை என்றாலும், கதாபாத்திரங்களும் கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுகளும் மேம்படுத்தப்படும். மொத்தத்தில் எனது பாணியிலான மகாபாரதமாக இருக்கும்” என்று தெரிவித்திருந்தார். இப்படம் சுமார் 10 பாகங்கள் கொண்ட படமாக இருக்கும். கூடிய விரைவில் இதற்கான வேலைகள் ஆரம்பிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

தற்போது ஒரு படம் எடுக்க எனக்கு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேல் பிடிக்கிறது. இந்த கணக்கில் மகாபாரதம் எடுக்க இன்னும் 10 அல்லது 12 ஆண்டுகள் ஆகலாம்” என்றார். இதைக்கேட்டு ராஜமௌலியின் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். இந்திய இதிகாச கதைகளை உலகிற்கு சொல்லும் இப்படிப்பட்ட இயக்குனர் கிடைப்பதற்கு நாம் அனைவரும் பெருமைக்கொள்ளவேண்டும்.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!