3 நாட்களில் பிறந்தநாள் கொண்டாட இருந்த RRR திரைப்பட பிரபலம் திடீர் மரணம்.. சோகத்தில் ரசிகர்கள்..!

Author: Vignesh
23 May 2023, 10:27 am

பிரம்மாண்ட ஹிட் திரைப்படமான பாகுபலி படத்தின் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடித்த இப்படத்தில் வில்லனாக நடித்த பிரிட்டிஷ் நடிகர் ரே ஸ்டீவன்சன் காலமானார். அவருக்கு வயது 58.

RRR villain ray stevenson-updatenews360

ஆர்ஆர்ஆர் படத்தில் சர் ஸ்காட் என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரே ஸ்டீவன்சன், ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் சர்வாதிகாரிகள் எப்படி இருந்தார்கள் என்பதை தன் நடிப்பால் கண்முன் கொண்டுவந்து இருந்தார். இவரது கேரக்டருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உலக புகழ்பெற்ற நடிகரான இவர் RRR தவிர, மார்வெல் தொடரான ​​தோர் படத்திலும் நடித்து உள்ளார்.

RRR villain ray stevenson-updatenews360

முன்னதாக, 1997ம் ஆண்டு ரே ஸ்டீவன்சன், ரூத் காமெல் என்பவரை திருமணம் செய்துகொண்டு, திருமணமான 8 ஆண்டுகளுகளில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கடந்த 2005-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.

RRR villain ray stevenson-updatenews360

இந்நிலையில், கேசினோ படத்தின் படப்பிடிப்பிற்காக இத்தாலி சென்றிருந்த நடிகர் ரே ஸ்டீவன்சன், அங்கு திடீரென மரணம் அடைந்தது, ஆர்.ஆர்.ஆர் படக்குழுவை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. அவரது மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, 3 நாட்களில் நடிகர் ரே ஸ்டீவன்சன் தனது 59-வது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 632

    0

    0