ராஜ வாழ்க்கை வாழும் இயக்குனர் ராஜமௌலி.. சம்பளம் மற்றும் மளமளவென அதிகரித்த முழு சொத்து மதிப்பு..!

Author: Vignesh
10 October 2023, 6:00 pm

தென்னிந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ராஜமௌலி பாகுபலி படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகத்தை உலக வரைபடத்தில் கொண்டு வந்த மேவரிக் இயக்குனர் என புகழ் பாராட்டப்பட்டார். வரலாற்று கதையம்சம் கொண்டு உருவான பாடம் இரண்டு பாகங்களாக வெளியாகி சரித்திர சாதனை படைத்தது.

ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி செதுக்கி உருவாக்கிய ராஜமௌலி பிரம்மாண்ட படைப்பாளியாக முத்திரை குத்தப்பட்டார். அதன் மாபெரும் வெற்றியை அடுத்து ஆர் ஆர் ஆர் படத்தை இயக்கியிருந்தார்.

இந்நிலையில் ராஜமௌலி குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தற்போது ஒரு படத்துக்கு ரூ.50 கோடி வரை சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் இயக்குனர்கள் வரிசையில் இருக்கும் எஸ்.எஸ்.ராஜமௌலியின் சொத்து மதிப்பு ரூ.158 கோடி இருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

ss rajamouli

அதாவது, ஹைதராபாத்தின் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் பல கோடி மதிப்பிலான பங்களாவை 2008ல் வாங்கி உள்ளார். 1.5 கோடி மதிப்பிலான பிஎம்டபுள்யூ மற்றும் ரேஞ்ச் ரோவர் உள்ளிட்ட கார்களை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Kasthuri About 60-Year-Old Actor 60 வயது நடிகருடன் நடித்தேன்..சினிமா வாழ்க்கையை போச்சு..புலம்பும் சர்ச்சை நடிகை.!
  • Close menu