மகேஷ் பாபுவுக்கு வில்லனாகும் மலையாள முன்னணி ஹீரோ; தெறிக்க விடும் ராஜ மௌலி
Author: Sudha4 July 2024, 11:14 am
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களுமே மக்களால் பெரிதும் ரசிக்கப்பட்டது. குறிப்பாக ராஜ மௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்று படத்தின் பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் தட்டிச் சென்றது.
தற்போது, மகேஷ் பாபு ஹீரோவாக நடிக்க “எஸ்எஸ்எம்பி29” திரைப்படத்தை இயக்கி வருகிறார் ராஜ மௌலி.இப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பர்ஸ்ட் லுக் டிரெய்லர் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. எம் எம் கீரவாணி இசையமைக்கிறார்.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.
மகேஷ் பாபுவுக்கு வில்லனாக மலையாள சினிமா உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் பிரித்விராஜ் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இவர்கள் இருவரின் கூட்டணியில் மீண்டும் ராஜ மௌலியிடம் ஒரு பிளாக்பஸ்டர் படைப்புக்காக திரையுலகம் காத்திருக்கிறது.