பிரபல தொகுப்பாளினி மர்ம நபர்களால் கடத்தல்.. வெளியான அதிர்ச்சி வீடியோ..!

Author: Vignesh
14 June 2023, 10:22 am

பிரபல தொகுப்பாளினியான பிரியங்காவை காணவில்லை என்ற ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் தொலைக்காட்சியின் தூண்களில் ஒருவராக இருக்கும் பிரியங்கா இவரின் பேச்சுத்திறமை அடித்துக்கொள்ள தொலைக்காட்சியில் ஆள் இல்லை என்று தான் கூற வேண்டும்.

பிரியங்காவின் நிகழ்ச்சிகளில், அவரின் காமெடியை பார்க்கவே தமிழகத்தில் பல கோடி ரசிகர்கள் இருப்பது நிதர்சனமான உண்மை இதனை தொடர்ந்து பிரியங்கா பிக் பாஸில் முக்கிய போட்டியாளராக கலந்து கொண்டு பங்கேற்று மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றார்.

Priyanka Deshpande-Ipdatenews360 (3)

ஆனாலும் இவரால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சியில் கடத்தப்பட்டார் என்ற பிரமோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் காட்டப்படும் காட்சியில் பிரியங்கா சாப்பாடு தட்டுடன் இருப்பது போன்றும் காட்டப்படுகின்றது.

priyanka deshpande - updatenews360

மேலும், பிரியங்காவை காணவில்லை என தொலைக்காட்சியில் செய்திகள் வாசிப்பது போன்ற இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை பப்ளிசிட்டிக்காக எடுத்து இருக்கலாம் என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ