சென்னை திருவான்மியூரில் கலாஷேத்ரா அறக்கட்டளை சார்பில் ருக்மணி தேவி கலை கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலைகள் கற்றுத்தரப்படுகிறது.
இந்நிலையில் கலாஷேத்ரா சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்றால் ஆசிரியரின் விருப்பங்களுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று பேராசிரியர்கள் கட்டாயப்படுத்துவதாகவும், பாலியல் சீண்டல்களை கொடுப்பதாகவும் அக்கல்லூரி மாணவிகள் புகார் அளித்தனர்.
ஆனால், கல்லூரி இயக்குனர் ரேவதி இராமச்சந்திரன் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் ஆத்திரமடைந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தின் வெளியே போராட்டத்திலும் ஈடுபட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பின்னர் இச்சம்பவம் பூதாகரமாக வெடித்தது.
இந்நிலையில் இது குறித்து பேட்டி அளித்துள்ள அக்கல்லூரியின் முன்னாள் மாணவியும் நடிகையுமான அபிராமி வெங்கடாச்சலம், “கலாஷேத்ரா என்ற பெயரை ஒழுங்காக சொல்லத் தெரியாதவர்கள் எல்லாம் இந்த கல்லூரியை பற்றி குறை கூறுவது ரொம்ப மனதிற்கு கஷ்டமாக இருக்கிறது.
10 வருடம் ஆக இந்த பிரச்சனை இருக்கிறது என்று சொல்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை. நானும் இந்த கல்லூரியில் படித்த முன்னாள் மாணவி தான். ஒரு பக்கம் இருக்கும் தரப்பை வைத்து மட்டும் பேசக்கூடாது. எந்த ஒரு பாலியல் தொல்லை நடந்தாலும் அந்த விஷயம் நடக்கும் போதே அதைப்பற்றி ஓபன் ஆக பேச வேண்டும். வளர்ந்து விட்டு ஏறி உக்காந்த பின்னர் ஓடுவது வேஸ்ட் என்றார் அபிராமி.
அவருக்கு பதிலடி கொடுத்துள்ள சின்மயி, ‘உண்மையை அப்போதே சொன்னாலும் தாமதமாக சொன்னாலும் அது உண்மைதான். நீங்கள் நம்பினாலும் அல்லது நம்பாவிட்டாலும் உண்மை தான். உண்மை பொய்யாகி விடாது என்று பதிவிட்டு இருக்கிறார் சின்மயி.
நடனப்புயல் நடனப்புயல் எனவும் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் எனவும் அழைக்கப்படும் பிரபுதேவா, இந்தியாவின் தலை சிறந்த நடன அமைப்பாளர் ஆவார்.…
தேர்தலை எதிர்கொள்ளப்போகும் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ள நிலையில் நடிகர் விஜய்…
கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதமணி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு அரசாங்கத்தை பொருத்தவரை ஆளுநருக்கு எதிரான…
விழுப்புரத்தில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய, திமுக துணைப் பொதுச்செயலாளரும், வனத்துறை அமைச்சருமான க.பொன்முடி, விலைமாதர்…
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என போற்றப்படும் பிரபுதேவா, மிகப் பிரபலமான நடிகர் மட்டுமல்லாது மிகச் சிறந்த…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று வெளியான நிலையில் அஜித்…
This website uses cookies.