ஒரே இரவில் தெருவுக்கு வந்த குணச்சித்திர நடிகையின் வாழ்க்கை; சிலிர்க்க வைக்கும் தன்னம்பிக்கை கதை,..

Author: Sudha
7 July 2024, 3:17 pm

மிகப்பெரும் செல்வந்தருக்கு மகளாகப் பிறந்து தந்தைக்கு தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே இரவில் வறுமையின் பிடியில் அகப்பட்டு தெருவுக்கு வந்து விட்டது இவர் குடும்பம்.

குடும்ப சூழல் காரணமாக நடிக்க வந்தவர். 17 வயதில் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்தில் ஒரு சின்ன கதாப்பாத்திரத்தில் அறிமுகமானார்.

17 வயதில் முதல் திரைப்படம். கதாநாயகிகள் பலர் நடிக்க தயங்கும் கதாப்பாத்திரத்தில் நடித்தார்.
அந்த திரைப்படத்தில் இவருக்கு திருமணத்திற்கு மீறிய உறவை விரும்பும் ஒரு பெண் கதாப்பாத்திரம்.
1979 இல் வெளிவந்த “கன்னிப் பருவத்திலே”திரைப்படம் அது.

ஆம் அவர்தான் வடிவுக்கரசி.இவர் சூலை மாதம் 7 ஆம் தேதி 1962 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார்.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மற்றும் 25 க்கும் அதிகமான தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார்.

வடிவுக்கரசியின் முதல் வேலை ஆரம்பப் பள்ளி ஆசிரியர்.

கஷ்டமான குடும்பச் சூழ்நிலை காரணமாக வேறு வேறு வேலைகளைத் தேர்ந்தெடுத்தார்.

பி யு சி வரை மட்டுமே படித்துள்ளார்.

தூர்தர்ஷனில் சில காலம் வேலை பார்த்துள்ளார்.

வறுமையின் கொடுமை அறிந்தவர் என்பதால் பட வாய்ப்பு, சீரியல் வாய்ப்பு எது கிடைத்தாலும் தன்னுடைய வேலை நாட்கள் எவ்வளவு என்பதைத் தான் கணக்கிடுவாராம்.

சீரியல் என்றால் அது எத்தனை வருடம் செல்லும். ஒரு மாதத்தில் எத்தனை நாட்கள் நாம் வேலை செய்வோம்.என்ற கணக்கைத்தான் போடுவாராம்

வடிவுக்கரசியின் தாய் மாமன் இயக்குனர் ஏ.பி. நாகராஜன்

ஏ.பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த
வடிவுக்கு வளைகாப்பு திரைப்படம் ஜூலை மாதம் 7 ஆம் தேதி 1962 இல் திரையிடப்பட்டது.அன்று அவர் பிறந்ததால் அவருக்கு வடிவுக்கரசி என பெயரிடப்பட்டது.

அருணாச்சலம் திரைப்படத்தில் இவரது கதாப்பாத்திரம் அனைவரையும் கவர்ந்தது.

முதல் மரியாதை திரைப்படத்தில் சிவாஜி கணேசனின் மனைவியாக இவர் நடித்து அசத்தியிருப்பார்.

சிவாஜி திரைப்படத்தில் ரஜினி அவர்களுக்கு அம்மாவாக நடித்தார்.

தனது இறுதி மூச்சு உள்ளவரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே அவர் விருப்பமாம்.

நடிப்பு அரசி வடிவுக்கரசி அவர்களின் பிறந்த தினம் இன்று.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 158

    0

    0