விஜயகாந்த் படத்தின் கதையை திருடினாரா அட்லீ… ஷாக் ஆன ஷாருக்கான் : பரபரப்பு புகார்!!
Author: Vignesh4 November 2022, 5:59 pm
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் அட்லி. இவர் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் உள்ள படங்களை இயக்கியுள்ளார்.
தற்போது இந்தி சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன் தாரா நடிப்பில் ஜவான் என்ற படத்தை இயக்கி வருகிறார். சில ஆண்டுகளாக ஷாருக்கானின் படங்கள் வெளியாகாத நிலையில், பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மிகப்பெரிய பட்ஜெட்டில் ஜவான் படம் உருவாகி வரும் நிலையில், தொடர்ந்து அட்லியின் படங்கள் மீது வைக்கப்படும் அதே குற்றச்சாட்டு இப்படத்திலும் இடம்பிடித்துள்ளது.
ஏற்கனவே இப்படத்தைப் பற்றிய சர்ச்சை உலா வரும் நிலையில்,அட்லீ இயக்கி வரும் ஜவான் படம் விஜய்காந்தி நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற பேரரசு படத்தின் கதை என கூறப்படுகிறது.
இந்த நிலையில், மாணிக்கம் நாராயணன் என்பவர் தயாரிப்பாளர் சங்கத்தில் புகாரளித்துள்ளார்.