STR 48 ல் சிம்பு வில்லன் ஆ.. அப்போ Hero?.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!

Author: Vignesh
8 July 2023, 2:30 pm

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகராக இருந்து தொடர்ந்து ஹிட் திரைப்படங்களில் நடித்து மார்க்கெட் பிடித்தவர் நடிகர் சிம்பு. இவர் குழந்தை நட்சத்திரமாக பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக தனது தந்தை டி.ராஜேந்தர் நான்கு வயதில் “என் தங்கை கல்யாணி” படம் மூலம் சிம்புவை கைக்குழந்தையாக அறிமுகம் செய்துவைத்தார்.

குழந்தை நட்சத்திரமாக பல்வேறு படங்களில் நடித்து சிறுவயதிலே சிம்பு புகழ் பெற்றார். தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் பதினெட்டு வயதில் “காதல் அழிவதில்லை” படம் மூலம் நாயகனாக அறிமுகமானார். தம், குத்து, கோவில், மன்மதன், வல்லவன் உள்ளிட்ட பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். கடைசியாக இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் பத்து தல இப்படம் பெரிதாக ஓடவில்லை. வெற்றிமாறனின் விடுதலை இப்படத்தை தூக்கி சாப்பிட்டுவிட்டது.

simbu-updatenews360

அதையடுத்து, தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் STR 48. கமல் ஹாசனின் தயாரிப்பில் தனது 48வது படத்தில் சிம்பு நடிக்க உள்ளார். ரூ.100 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாராகும் இப்படம் சிம்பு கேரியரில் அதிகபட்ச பட்ஜெட்டில் உருவாகும் திரைப்படம் ஆகும்.

simbu-updatenews360

இந்த திரைப்படத்தில் சிம்புவை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வண்ணம் செம அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது.

simbu-updatenews360

அதாவது எஸ் டி ஆர் 48 திரைப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் என நடிகர் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். மேலும், ஒரு கெட்டப்பில் உடல் எடைகூடியும் மற்ற ஒரு கெட்டப்பில் உடல் எடை குறைத்தும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான முயற்சியில் தான் தற்போது சிம்பு ஈடுபட்டுள்ளாராம்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 421

    0

    0