சிம்புவுடன் இணையும் மலையாள நடிகை..அந்த பிரபல காமெடி நடிகருமா..கோலிவுட்டில் புது மஜா கூட்டணி.!

Author: Selvan
9 February 2025, 12:09 pm

STR-49 படத்தின் மாஸ் அப்டேட்

தமிழ் சினிமாவில் நீண்ட நாட்களுக்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சிம்பு,பல வருடமாக இவரைப்பற்றி உலா வந்த பல வதந்திகளுக்கு தன்னுடைய அப்டேட்டால் வாயடைத்து உள்ளார்,மேலும் சிம்பு புதிதாக ஆத்மன் சினிஆர்ட்ஸ் என்ற புது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

இதையும் படியுங்க: ‘விடாமுயற்சி’ படம் இல்லை..கார் ரேஸ் தளம்..படக்குழுவை தாக்கிய பிரபலம்..ரசிகர்கள் ஆவேசம்.!

இதனால் சிம்பு ரசிகர்கள் அளவற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.இந்த நிலையில் சிம்பு பொறியல் கல்லூரி மாணவனாக நடிக்க உள்ள STR-49 படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.இப்படத்தில் அவர் மாணவனாக நடிப்பதால்,இப்படத்தில் காதல் காட்சிகள் பெரும்பாலும் இருக்க வாய்ப்பு உள்ளது,இதனால் சாய் பல்லவியை படக்குழு தேர்ந்தெடுத்துள்ளது.

சாய் பல்லவி ஏற்கனவே அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார்.மேலும் ப்ரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலம் ஆனவர்,அதனால் இப்படத்தில் சாய் பல்லவி மாணவியா இல்லை டீச்சரா என்பது கூடிய விரைவில் தெரிய வரும்,இருவரும் நடனத்தில் கில்லாடி என்பதால் இப்படத்தில் பாடல் காட்சிகளுக்கு அதிகம் முக்கியத்துவம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதுமட்டுமின்றி இப்படத்தில் சந்தானம் மீண்டும் காமெடியனாக கம்பேக் கொடுக்க உள்ளாராம்,இதனால் STR-49 படம் மீது ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கின்றனர்.

  • Kamal Haasan about Gandhi காந்தியை மன்னிக்கவே மாட்டேன்.. கமல்ஹாசன் பேச்சால் மீண்டும் பரபரப்பு!
  • Leave a Reply