சிம்புவே ரெடி; ஆனா ஷூட்டிங் ஆரம்பிக்கல! இயக்குனர் செய்த காரியத்தால் தள்ளிப்போகும் STR 49?

Author: Prasad
29 April 2025, 6:03 pm

STR 49

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தனது 49 ஆவது திரைப்படத்தில் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணனுடன் இணையவுள்ளார். 

str 49 movie shooting postponed because of director

ராம்குமார் பாலகிருஷ்ணன் 2023 ஆம் ஆண்டு வெளிவந்த “பார்க்கிங்” திரைப்படத்தை இயக்கியவர். “பார்க்கிங்” திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இதனை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை இயக்குகிறார். 

தள்ளிப்போன படப்பிடிப்பு

இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடிக்க உள்ளார். பல ஆண்டுகள் கழித்து காமெடி ரோலில் சந்தானம் நடிப்பது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஏப்ரல் மாதமே தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளிவந்தன. 

ஆனால் தற்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளதாக ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. அதாவது இயக்குனர் தான் இதுவரை  எழுதியுள்ள திரைக்கதை தனக்கு ஒரு முழுமையான உணர்வை தரவில்லை என்று நினைத்தாராம். இதனை சிம்புவிடம் வெளிப்படுத்தி ஒரு இரண்டு மாதங்கள் கழித்து படப்பிடிப்பை தொடங்கலாம் என கேட்டுக்கொண்டாராம். சிம்புவும் சரி என்று ஒப்புக்கொண்டாராம். 

str 49 movie shooting postponed because of director

இந்த இரண்டு மாத இடைவெளியில் சிம்பு தனது 50 ஆவது திரைப்படத்தின் புரொமோவுக்கான படப்பிடிப்பில் ஈடுபடப்போகிறாராம். இவ்வாறு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. எப்போதும் சிம்புவால்தான் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக புகார்கள் எழும். ஆனால் தற்போது இயக்குனரால் படப்பிடிப்பு தள்ளிப்போயுள்ளது சிம்புவின் வளர்ச்சியை காட்டுவதாக பலரும் பாராட்டி வருகின்றனர். 

  • ajith kumar interview on india today after long gap வெகு கால இடைவெளிக்குப் பிறகு டிவி பேட்டியில் தோன்றும் அஜித்! அதிசயம் ஆனால் உண்மை!
  • Leave a Reply