STR 49 பட இசையமைப்பாளரை அறிவித்து புத்தாண்டு வாழ்த்துகளை பகிர்ந்த சிம்பு…

Author: Prasad
14 April 2025, 12:33 pm

வரிசையாக களமிறங்கும் சிம்பு

“தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்பு தான் தொடர்ந்து நடிக்கவுள்ள மூன்று திரைப்படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். இதில் “STR 49” திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கவுள்ளார். அதனை தொடர்ந்து “STR 50” திரைப்படத்தை தேசிங்கு பெரியசாமியும் 51 ஆவது திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்துவும் இயக்கவுள்ளனர். 

str 49 music composer is sai abhyankkar

இதில் “STR 49” திரைப்படத்தில் சிம்பு ஒரு கல்லூரி பேராசிரியராக நடிப்பதாக கூறப்படுகிறது. இத்திரைப்படத்தை Dawn Pictures ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்க உள்ளார். இந்த நிலையில் தற்போது இத்திரைப்படத்தின் இசையமைப்பாளரை சிம்பு தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் புகைப்படங்களுடன் அறிவித்துள்ளார். 

டிரெண்டிங் இசையமைப்பாளர்…

“STR 49” திரைப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளார். சமீப காலமாக முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு சாய் அப்யங்கர் ஒப்பந்தமாகி வருகிறார். “பென்ஸ்”, “சூர்யா 45”, “பிரதீப் ரங்கநாதன் 04” ஆகிய திரைப்படங்களுக்கு சாய் அப்யங்கர் இசையமைத்து வரும் நிலையில் அட்லீ-அல்லு அர்ஜூன் இணையும் பிரம்மாண்ட பிராஜெக்ட்டிற்கும் சாய் அப்யங்கர் இசையமைக்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில்தான் சாய் அப்யங்கர் சிம்புவின் 49 ஆவது திரைப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார். “கட்சி சேர”, “ஆச கூட” போன்ற ஆல்பம் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர் சாய் அப்யங்கர் என்பது குறிப்பிடத்தக்கது. 

  • ajith fans released poster on ilaiyaraaja compensation on good bad ugly viral on internet இசைஞானியே! இது தர்மமா? போஸ்டர் வெளியிட்டு புலம்பும் அஜித் ரசிகர்கள்! அடப்பாவமே…
  • Leave a Reply