பலமான போட்டி… ரஜினியை கண்டு நடுங்கினாரா கமல்…? ஆண்டவரே ஆடிப்போன தருணம்!

Author: Shree
19 June 2023, 3:23 pm

தமிழ் சினிமாவின் இரு துருவ நடிகர்களான ரஜினி கமல் இருவரும் போட்டிக்போட்டுக்கொண்டு மாறி மாறி தொடர் வெற்றிப்படங்களில் நடித்து முன்னணி ஹீரோ என்ற அந்தஸ்தை பிடித்தனர். இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜாம்பவானாக உயர்ந்தார்கள்.

ரஜினி எந்த ஒரு சினிமா பேக்ரவுண்டும் இல்லாமல் வந்து திரைத்துறையில் சாதித்தார். ஆனால், கமல் ஹாசன் அப்படியில்லை அவரை சுற்றி சந்திர ஹாசன், சாரு ஹாசன் என மிகப்பெரிய நட்சத்திர குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்தார். ஆனால் அவரை ஒரு கட்டத்தில் நடுங்க வைத்தாராம் ரஜினி. இது குறித்து கமல் பேட்டி ஒன்றில் ரஜினியால் தான் நான் இந்த அளவுக்கு வளர்ந்தேன் என கூறியுள்ளார்.

ஆம், ரஜினி என்னை ஒரு மேடையில் மிகச்சிறந்த நடிகன் என கூறி பாராட்டினார். இந்த அளவுக்கு நான் வளர எப்படி கே . பாலசந்தர் முக்கியமோ அதே போன்று என் வளர்ச்சிக்கு ரஜினி மிகமுக்கியமான காரணமாக இருந்தார். போட்டியின்றி நான் வளர்ந்திருந்தால் இந்நேரம் அசந்து தூங்கியிருப்பேன். ஆனால், ரஜினி வந்து எனக்கு பலமான போட்டி கொடுத்தார். அதனால் என் வளர்ச்சி இன்னும் அதிகமானது. நான் நடந்துக்கொண்டிட்ருந்தபோது இதோ பார் உன்னைவிட ஒரு அற்புதமான நடிகன் வந்திருக்கான். இனி நீ நடக்க கூடாது ஓடவேண்டும் என எனக்கு உணர்த்தியவர் அவர் தான் என மேடையில் பேசியுள்ளார். இந்த பழைய வீடியோ தற்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

https://www.youtube.com/shorts/Jd5l72pWj6Y
  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!