திரிஷாவை கற்பழிக்க விடல…. மன்சூர் அலிகான் பேச்சுக்கு வலுக்கும் கண்டனம்!

Author: Shree
19 November 2023, 8:37 am

தமிழ் சினிமாவின் பிரபல வில்லன் நடிகரான மன்சூர் அலிகான் 90ஸ் காலகட்டத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் ஹீரோவை மிரட்டி எடுத்தவர். இவர் வில்லனாகவும், குணசித்திர நடிகராவும் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி திரைப்படங்களில் நடித்து பெரிதும் புகழ் பெற்றார். குறிப்பாக கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் இவரது வில்லத்தனமான நடிப்பு தமிழ் சினிமாவையே மிரள வைத்தது.

இதனிடையே அரசியல் பக்கம் தலைகாட்டினார். அவ்வப்போது சர்ச்சையாக எதையேனும் பேசி வம்பில் சிக்குவதையே வாடிக்கையாக வைத்திருக்கிறார். இதனிடையே அவ்வப்போது கிடைக்கும் படவாய்ப்புகள் தொடர்ந்து நடித்து வருகிறார். கடைசியாக விஜய்யின் லியோ படத்தில் முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்திருந்தார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் லியோ படத்தில் வில்லனாக நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷா குறித்து மிகவும் கொச்சையாக முகம் சுளிக்கும் வகையில் பேசியுள்ளார். அதாவது லியோ படத்தில் வில்லனான என்னை திரிஷாவை கற்பழிக்கவே விடல… காஷ்மீர் பணியில் அவரின் பஞ்சு மேனி பார்க்கவே ரொம்ப அழகா இருந்தது.

திரிஷாவை கட்டிலில் தூக்கிப்போட்டு அவரை கற்பழிக்கும் சீன் பண்ணனும்னு எனக்கும் ஆசையா இருந்துச்சு என்றெல்லாம் கொச்சையாக முகசுளிக்கும் வகையில் பேசி ஒட்டுமொத்த திரையுலத்தையே தலைகுனிய வைத்துள்ளார். மன்சூர் அலிகானின் இந்த பேச்சுக்கு திரையுலகத்தை சேர்ந்த பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ :

  • Mookuthi Amman 2 latest shooting update அடடே! விரதம் இருந்த நயன்தாரா…கோலாகலமாக ஆரம்பித்த மூக்குத்தி அம்மன் 2 பட பூஜை.!