விஜய் ஒரு கூமுட்டை.. லாரியில் அடிப்பட்டு செத்துருவ : கடுமையாக தாக்கி பேசிய பிரபலம்!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2024, 11:59 am

தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்த நடிகர் விஜய், முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். அவர் பேசிய கொள்கை, கோட்பாடு குறித்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனத்தை முன் வைத்து வருகிறது.

இந்த நிலையில் தனது தம்பி தம்பி என விஜய்யை பற்றி பேசும் சீமான், தற்போது விஜய்யை வெளுத்து விட்டுள்ளார்.

விஜய் கொள்கை என்பது கொள்கையே அல்ல, அது கூமுட்டை. சாலையில் ஓரமாக நிற்க வேண்டும். இல்லையென்றால் லாரியில் அடிப்பட்டு செத்துவிடுவாய்.

உன்னை மாதிரி குட்டிக் கதை சொல்பவன் நான் அல்ல.. நான் வரலாற்றை கற்பிக்க வந்தவன். பெரியார் மற்றும அம்பேத்கரை பற்றி நீ நல்லா படிக்க வேண்டும். நாங்க அதுல பிஎச்டியே முடிச்சிட்டோம்.

நான் அரசியலுக்கு வரவில்லை என்றால் வேலு நாச்சியார், அஞ்சலை அம்மாள் யாரென்றே தெரிந்திருக்காது. நாங்கள் சங்க இலக்கியங்களை கரைத்து குடித்தவர்கள். இனிதான் நீங்கள் சங்க இலக்கியங்களை தேட வேண்டும் என கடுமையாக பேசியுள்ளார்.

  • Family Man 3 Actor Rohit Basfore Found Dead Near Guwahati Waterfall நடுக்காட்டில் பிரபல நடிகர் சடலமாக மீட்பு : சதி திட்டம் போட்ட நண்பர்கள்? பகீர் பின்னணி!