கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிகை நயன்தாரா தொடர்ந்து நடித்து வருவதன் காரணமாக தான் லேடி சூப்பர்ஸ்டார் என மக்கள் கொண்டாடுகின்றனர்.
இதனிடையே, வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில், உருவாகியுள்ள கனெக்ட்’ படம், வெளியாகவுள்ளது. சத்யராஜ், அனுபம் கெர், வினய் ராய் என பலர் நடித்துள்ள ‘கனெக்ட்’ படம், 99 நிமிடங்கள் ஓடும் எனவும், இப்படத்துக்கு இடைவெளி இல்லை என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
கனெக்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்காக புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோவை பார்க்க நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்து கலந்துகொண்டார். இவர்களுடன் ஏராளமான திரைப்பிரபலங்களும் படத்தை பார்த்து ரசித்தனர்.
இந்த நிகழ்ச்சிக்கு ஹாலிவுட் ஹீரோயின் போல் செம்ம மாஸாக வந்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.
நடிகர் விஜய் முதலில் பத்திரிகையாளர்களைச் சந்திக்கட்டும், அதற்கு பிறகு நீங்கள் அவரிடம் கேள்வி கேளுங்கள் என நடிகர் விஷால் கூறியுள்ளார்.…
'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…
மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…
அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…
சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…
தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…
This website uses cookies.