ஸ்டைலு ஸ்டைலு தான்.. நீ சூப்பர் ஸ்டெயிலு தான் : அஜித்துக்காக போடப்பட்ட பாட்ஷா ட்யூன்!!

Author: Vignesh
21 August 2023, 6:11 pm

மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் எதிர்நீச்சல். அப்பா-மகள் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தை எடுத்துரைக்கும் கதை. மதுரையில் கூட்டு குடும்பமாக வாழும் குடும்பத்தில் ஆண் ஆதிக்கத்தை நிலை நிறுத்தியே வருகின்றனர். அந்த குடும்பத்திற்கு திருமணம் செய்து வரும் பெண்களை எல்லாம் வீட்டு வேலை செய்யும் பெண்களாக கருதி வருகிறார்கள். அவர்களை எதிர்த்து அந்த பெண்கள் எப்படி போராடுகிறார்கள் என்பதே இந்த சீரியலின் கதை.

இந்த தொடரில் குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வில்லனாக மிரட்டி வருபவர் மாரிமுத்து. இவர் இதற்கு முன்பே வெள்ளி திரையில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். ஆனால், இவருக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் உருவாகி இருப்பது எதிர் நீச்சல் தொடர் மூலம் இருப்பது தான் “எதிர் நீச்சல்” சீரியல் மூலம் தான்.

இந்நிலையில், பேட்டி ஒன்றிய பங்கேற்ற மாரிமுத்து ஆசை படத்தில் இணை இயக்குனராக பணியாற்றியபோது, நடந்த சம்பவம் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.

rajini -updatenews360

அதாவது, பாட்ஷா படத்தின் “ஸ்டைலு ஸ்டைலு தான்” பாடல் முன்னதாக நடிகர் அஜித்தின் ஆசை படத்துக்காக முதலில் போடப்பட்டதாகவும், சற்று மெல்லிசையாக வேண்டும் என இயக்குனர் வசந்த் கேட்டுக் கொண்டதால் அதற்கு மாற்றாக மீனம்மா பாடலை தேவா கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். என்னதான் அந்த பாடல் அஜித்துக்காக இசையமைத்தாலும் அந்த பாடல் ரஜினிக்கு எப்போதும் செட் ஆகும் என ரஜினி ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

  • Rajendran Annamalai University story in Parasakthi லீக் ஆன பராசக்தி கதை…யார் அந்த ராஜேந்திரன்…அப்போ இதிலும் சிவகார்த்திகேயன் இறந்துவாரா…!