வயிறு வலிக்குதுனு சொன்னது ஒரு குத்தமா? பீரியட்ஸானு கேட்டு கிண்டல் அடித்த பாலா.. இதுதான் வணங்கான் பஞ்சாயத்தா?..
Author: Vignesh26 December 2023, 3:09 pm
வணங்கான் என்ற பெயரும் சூர்யா 41 படத்திற்கு வந்து கூடிய சீக்கிரம் இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று கூறப்பட்டது. ஆனால், கதை போக்கு மாறிப்போனதால் சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலக்கிவிடப்பட்டதாக பாலா அறிக்கை வெளியிட்டார்.

இதற்கு காரணம் பாலா, சூர்யா இடையே கருத்து வேறுபாடும் சண்டையும் தான் காரணம் என்று கூறிப்படுகிறது. மேலும் அவரை கொடுமை படுத்தி டார்ச்சர் செய்து… அதிகம் பணம் பிடிங்கி செலவழித்து வந்துள்ளார். ஒரு கட்டத்திற்கு மேல் படமே வேண்டாம் என கூறிவிட்டு சூர்யா விலகிக்கொண்டார். இது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கு காரணம் பலர் பலவிதமாக கூறி வந்த நிலையில், பத்திரிக்கையாளர் சுபைர் முக்கிய பிரச்சினை என்ன என்பதை பற்றி பகிர்ந்துள்ளார். இன்றைய எதார்த்தத்தை புரிந்து கொள்ளாத பாலா சூர்யாவை நந்தா பட சூர்யா என்று நினைத்துக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சூர்யாவை ஷூட்டிங் ஸ்பாட்டில் ஓட வைத்து கொண்டே இருந்தது தான் பிரச்சனை என்றார்கள்.

ஆனால், ஷூட்டிங்கில் சூர்யா தனக்கு வயிற்று வலி என்று கூறி இருக்கிறார். அதற்கு பாலா, ஏன் பீரியட்ஸானு கேட்டு கிண்டலாக கேட்டுவிட்டாராம். இதனால், தான் சூர்யா பாலாவிடம் இருந்து ஒதுங்க முடிவெடுத்தாராம். அதன் பின்னர் சூர்யா விலக நடிகர் அருண் விஜயை வைத்து படம் எடுத்து வருகிறார் பாலா. படத்தின் சூட்டிங் ஆரம்பித்தும், இன்னும் படத்தின் வேலைகள் தாமதமாகி வருவது குறிப்பிடத்தக்கது.