அடுத்தடுத்து பிரபலங்கள் மறைவு : பரியேறும் பெருமாள் பட நடிகர் நெல்லை தங்கராஜ் மரணம்.. திரையுலகினர் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
3 February 2023, 10:39 am

பரியேறும் பெருமாள் படத்தில் தெருக்கூத்து கலைஞராக அறிமுகமான நெல்லை தங்கராஜ் உடல்நிலை குறைவால் காலமானார்.

பரியேறும் பெருமாள் படத்தில் கதாநாயகனின் தந்தையாக அறிமுகமான அவர் பெண் தெருக்கூத்து கலைஞராக நடித்து பெரும் வரவேற்பை பெற்றவர் நெல்லை தங்கராஜ்.
இந்த படத்தை பார்த்துவிட்டு முதல்வர் ஸ்டாலின் இன்னும் பல பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர் தோன்ற வேண்டுமென்பதை உணர்த்திய படம் என்று ட்வீட் செய்து திரைப்பட குழுவிற்கு பாராட்டி இருந்தார்.

தெருக்கூத்துக்கலைஞரான இவர், குடியிருக்க வீடு இல்லாமல் ஓலை குடிசையில் வசித்து வந்த நிலையில், அவருக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், நெல்லை தங்கராஜ் இன்று அதிகாலை 5 மணிக்கு உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பழம்பெரும் இயக்குநர், நடிகர் விஸ்வநாத் அவர்கள் மரணமடைந்த நிலையில், நெல்லை தங்கராஜ் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?