எதிர்ப்பை மீறி பிரபல நடிகரை காதல் திருமணம் செய்த வாரிசு நடிகை… 28 வருடங்களாக சோகமாக செல்லும் வாழ்க்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 March 2023, 12:55 pm

சினிமாவில் காதல் , திருமணம் கிசிகிசு என்பது சாதாரண விஷயம்தான். ஆனால் அப்படி உண்மையாக காதலித்து திருமணம் வரை சென்று நிலைத்து வாழ்க்கையை வென்று காட்டிய சினிமா பிரபலங்கள் வெகு சிலரே.

அப்படித்தான் பிரபல நடிகரை வீட்டின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து தற்போது வரை சோகமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் வாரிசு நடிகையான நிரோஷா.

நடிகவேல் எம்ஆர் ராதாவின் இளைய மகளும் ராதிகாவின் தங்கையுமான நடிகை நிரோஷா 1988ல் வெளியான அக்னி நட்சத்திரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமனார். தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார்.

செந்தூரப்பூவே படத்தில் முதன்முறையாக ராம்கிக்கு ஜோடியாக நடித்தார். அந்த படத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இருப்பினும் அதை வெளியே சொல்லாமல் தொடர்ந்து ராம்கியுடன் பல படங்களில் ஒன்றாக நடித்தனர்.இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

ஒரு கட்டத்தில் காதல் விஷயம் வீட்டிற்கு தெரிந்து நிரோஷாவை எச்சரித்துள்ளனர். ஆனால் அதையெல்லாம் மீறி 1995ல் ராம்கியை கரம் பிடித்தார். தொடர்ந்து சொத்து பிரச்சனை, வீடு ஜப்தி என பல பிரச்சனைகளை இருவரும் சமாளித்தனர்.

திருமணத்திற்கு பின் 2000ஆம் ஆண்டு முதல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பை மீண்டும் தொடர்ந்தார். என்னதான் இருவரும் மனம் ஒத்து திருமணம் செய்தாலும், இவர்களுக்கு இருக்கும் ஒரே கவலை குழந்தை இல்லாததுதான்.

இருப்பினும் இந்த ஜோடி இன்றும் மிகவும் அன்யோன்யமாய் உள்ளனர். 28 வருடங்களாகியும் குழந்தைப்பேறு இல்லாமல் வாழ்க்கை வாழ்நது வருகின்றனர்.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1021

    14

    6