எனக்கும் என் மகளுக்கும் வாழ்க்கை கொடுத்தது இவர் தான்…. மேடையில் நெகிழ்ந்த சந்தோஷ் நாராயணன்!
Author: Shree14 June 2023, 8:40 am
தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான சந்தோஷ் நாராயணன் 2012ம் ஆண்டு வெளியான அட்டகத்தி படத்திற்கு இசையமைத்து அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே தனது வித்யாசமான இசையால் மக்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுத்தார். இவர் தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களுக்கு இசை மற்றும் பாடல்களை அமைத்துள்ளார்.
தொடர்ந்து தமிழில் பீஸ்ஸா, சூது கவ்வும், பிஸ்ஸா 2: தி வில்லா, ஜிகர்தண்டா, மெட்ராஸ், எனக்குள் ஒருவன், 36 வயதினிலே, காதலும் கடந்து போகும், கபாலி, பைரவா, மேயாத மான், காலா, பரியேறும் பெருமாள், கர்ணன், ஜகமே தந்திரம், சர்ப்பட்ட பரம்பரை உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவரது மகள் தீ தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்களுக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். குறிப்பாக என்ஜாய் எஞ்சாமி பாடல் மூலம் உலகம் முழுக்க பேமஸ் ஆனார்.
இன்னிலையில் சந்தோஷ் நாராயணன் பேட்டி ஒன்றில், என்னுடைய முதல் படம் அட்டகத்தி படத்தின் ஆடியோ லாஞ்சிற்கு பெரிதும் உதவி என்னை யார் என்று மக்களுக்கு அடையாளப்படுத்தியவர் யுவன் ஷங்கர் ராஜா தான். அதே போன்று என் மகள் தீ அவருக்கும் ரௌடி பேபி ஹிட் பாடலை கொடுத்து எங்க இரண்டு பேருக்கும் வாழ்க்கை கொடுத்தார். அவரால் தான் இன்று பெரிய இயக்குநரகளின் படங்களில் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அதனால், அவர் செய்த நன்றியை என்றும் மறக்கமாட்டேன் என கூறினார்.