ஆள் வைத்து பிரச்சனை?.. ரொம்ப டார்ச்சர் பண்றதே அவர் தான்.. மீண்டும் அதிர்ச்சி கொடுத்த சுசித்ரா..!
Author: Vignesh25 May 2024, 4:55 pm
தமிழ் சினிமாவை பொறுத்தவரை தற்போது ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருவது சுசித்ரா கொடுக்கக்கூடிய பேட்டிகள் தான். முன்னதாக, தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் பற்றியும் சினிமா துறையை சார்ந்த பிரபல நட்சத்திரங்களின் பார்ட்டிகள் குறித்தும் பேசி அவர் கொடுத்த பேட்டி, பலரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க: நமக்கு எதுக்கு வம்புனு ஒதுங்கிய உச்ச நடிகர்கள் – மோடியின் Biopic’ல் ஹீரோவாக நடிக்கும் தமிழ் நடிகர்..!
சுசித்ராவின் சர்ச்சையான பேச்சு குறித்து முன்னாள் கணவர் கார்த்திக் புகார் அளித்திருந்ததை அடுத்து, சென்னை நீதிமன்றம் கார்த்திக் குமாரை பற்றி சுசித்ரா பேச தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இது ஒரு பக்கம் இருக்க, சுசித்ரா ராஜா என்ற இலங்கை தமிழரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டதாகவும், அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
மேலும் படிக்க: அவளுக்கு அபார்ஷன் ஆன உனக்கு என்ன?.. சுசி லீக்ஸ் குறித்து பேசிய பிரபலத்தின் அம்மா..!
மேலும், பேசுகையில் தன்னுடைய இரண்டாம் திருமண வாழ்க்கை பற்றி அவர் பகிர்ந்ததில் பல தொழில்கள் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதில், என் மாமியார் செய்யும் சமையல் பற்றி புத்தகம் எழுதலாம் என்று இருக்கிறேன். என் மாமியார் இலங்கை, நான் இப்போது இலங்கையின் மருமகள். ராவணனை கட்டிக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களுடைய புது திருமண வாழ்க்கையில் யாரும் தொந்தரவு செய்யவில்லை தானே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து சுசித்ரா பயில்வான் தான் பெரிய தொந்தரவு அவர்தான் என் வீட்டிற்கு ஆள் வைத்து பிரச்சனை செய்ய இருக்கிறாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. அவர் இதை ஏற்கனவே செய்திருக்கிறார்.