‘Call Girl’- பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடிய விஷால்?.. கமல், சிம்பு, யுவன் என இஷ்டத்துக்கு பேசும் சுசித்ரா..!

Author: Vignesh
17 May 2024, 7:00 pm

பிரபல பாடகி, ஆர்ஜே, தொலைக்காட்சி தொகுப்பாளர், நடிகை என பல முகங்களை கொண்டவர் சுசித்ரா. தமிழ் சினிமாவில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் சினிமா பிரபலங்களின் அந்தரங்க வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். இதனால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பிறகு சுசித்ரா மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் பரவியது.

Suchitra Karthik

சமீபத்தில் தனக்கு மனநிலை சரியில்லை என கூறி பயில்வான் ரங்கநான் வெளியிட்ட வீடியோவை பார்த்து கடுப்பான சுசித்ரா, தன்னைப் பற்றி பேச சொன்னது தனுஷ் தானே என்றும் தனுஷ் எவ்வளவு பணம் கொடுத்தார் என்று கேட்டும் விளாசினார். மேலும் தன்னிடம் சில வீடியோக்கள் இருக்கிறது, அதைப்பற்றியும் பேசுங்கள் என்றும் கூறி திணற வைத்தார். அவர் பேசிய ஆடியோக்கள் இணையத்தில் பெரும் வைரலானது.

Suchitra Karthik

மேலும் படிக்க: Adjustment பண்ண சொல்லி மிரட்டுனாங்களா?.. பிரியா பவானி சங்கர் கொடுத்த பகீர் பதில்..!

இந்நிலையில், சுச்சி லீக்ஸ் சர்ச்சை விட தற்போது பெரிய சர்ச்சை ஒன்றை கிளம்பியிருக்கிறார் சுசித்ரா. சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுசித்ரா அதிர்ச்சி தகவல்களை பகிர்ந்துள்ளார். பாலிவுட் நடிகர் ஷாருக்கான் முதல் தமிழ் நடிகர்கள் வரை பலரின் அந்தரங்க விஷயங்களை பற்றி பரபரப்பாக பேட்டி கொடுத்து வருகிறார். இந்த சூழ்நிலையில், சுசித்ரா நடிகர் விஷால் குறித்து பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Priyanka Mohan -updatenews360

பொன்னின் செல்வன் படத்தின் ஆடியோ லான்ச்சில் கூட நிறைய பிரபலங்கள் போதையை போட்டுக்கொண்டு பேசுவது போல் தெரியும். பார்ட்டி 6 மணி நேரம் நடக்கும் என்றால், 12 மணிக்கு அரபிக் கேர்ள்ஸ் வருவார்கள். சமீபத்தில் கூட விஷால் ஒரு ‘Call Girl’ பொண்ணுடன் ஓடிய வீடியோ வைரல் ஆனது. இதனால், தான் சரத்குமார் வரலட்சுமி விஷாலுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுத்துவிட்டார் என்று பகிர் தகவலை வெளியிட்டுள்ளார்.

dhanush simbu - updatenews360

இங்கு தனுசுக்கு சிம்புவை பிடிக்காது, சிம்புவுக்கு விஷாலை பிடிக்காது. ஆனால், எல்லோரும் சேர்ந்து ஒரே வீட்டில் பார்ட்டி செய்வார்கள். அந்த எலைட் மக்கள் தான் போதை கலாச்சாரத்தை கொண்டு வந்தார்கள். சிம்பு, யுவன் சங்கர் ராஜா ,வெங்கட் பிரபு, போன்ற பணக்கார வீட்டு பசங்கள்தான் அதனை கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒரு காலத்தில் நம்ம ஊர் மஞ்சுவல் பாய்ஸ் போல தான் இருந்தார்கள். கமல் பர்த்டே பார்ட்டியில் வெள்ளி தாம்பூலத்தில் கொக்கைன் வரும் என்று தெரிவித்திருந்தார் இதனைப் பார்த்த பலரும் என்ன வாய்க்கு வந்தபடி எல்லாரையும் இழுத்து விட்டு இருக்காங்க என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

  • Monalisa Bose viral at Kumbh Mela மகா கும்பமேளாவில் வைரலான இளம் பெண்…அழகில் மயங்கிய பிரபல இயக்குனர்…தட்டி தூக்கிய பாலிவுட்..!