தமிழ் சினிமாவில் சர்ச்சைக்குரிய பிரபல பாடகியாக பார்க்கப்படுபவர் தான் பாடகி சுசித்ரா. இவர் திரைப்படங்களில் பின்னணி பாடகியாகவும் , டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும், திரைப்பட நடிகையாகவும் இருந்து தனித்திறமையை வெளிப்படுத்தி காட்டி பிரபல நட்சத்திரமாக இருந்து வந்தார் .

இதனிடையே சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் சிக்கி சுசித்ரா மிகப்பெரிய அளவில் சர்ச்சைக்குள்ளான நபராக பார்க்கப்பட்டார். இது குறித்து சமீபத்தில் அடுக்கடுக்கான பல புகார்களை கூறி அதிர வைத்தார். குறிப்பாக கோலிவுட் சினிமாவில் பிரபலமான பல நட்சத்திரங்களின் அந்தரங்க விஷயங்களை இவர் அவிழ்த்து விட்டது பெரும் பேசு பொருளானது.
அது மட்டும் இல்லாமல் தனது கணவர் கார்த்திக் மற்றும் தனுஷ் இருவரும் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர் எனக் கூறி அதிர வைத்தார். இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது மாமியார் குறித்து பேசி இருக்கும் நடிகை சுசித்ரா, என்னுடைய மாமியார் சுத்த வேஸ்ட் அவங்க நிறைய பிராடு வேலை செய்றாங்க.
அனாதை குழந்தைகளை காசுக்கு விற்கிறார். இந்த விஷயத்துல அரசுக்கும் கட்டுப் போகுது. இதனால அவங்கள யாரும் கைது பண்ணவே முடியாது என்று கூறி அதிர வைத்திருக்கிறார். மேலும், அவருடைய மகன் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தும் நான் திருமணம் செய்து கொண்டது ஏதோ அமுக்கப்பட்ட கோழி அப்படின்னு அவங்க நினைச்சுட்டாங்க. இத்தனை வருஷங்கள் கழிச்சு நான் இவ்வளவு விஷயத்தை வெளிப்படையாக வந்து இந்த சமயத்தில் பேசுவதற்கு மிக முக்கிய காரணமே எனக்கு ஒரு தங்கச்சி இருக்காங்க.

அவங்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும். அவள் வாழ்க்கையாவது நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இத்தனை விஷயங்களும் இவ்வளவு நாள் நான் வெளியில் பேசாமல் வாய் மூடிக்கொண்டு இருந்தேன். ஆனால், அவளுக்கு திருமணம் ஆகிவிட்டது. இப்போது எனக்கு என்று எந்த பிரச்சனையும் இல்லை.
அதனால் தான் இந்த சமயத்தில் வந்து எல்லா விஷயத்தையும் கூறுகிறேன் . என சுசித்ரா அந்த பேட்டியில் கூறி இருந்தார். இதை அடுத்து சுசித்ராவின் இந்த அடுக்கடுக்கான புகார் குறித்து அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார் வழக்கு தொடர்ந்தார். பின்னர் சுசித்ரா கார்த்திக் குமார் குறித்து பேச நீதிமன்றம் அவருக்கு இடைக்கால தடை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.