திரிஷா எடுத்த அதிரடி முடிவு… கைக்கொடுக்கும் விஜய்? ரசகிர்கள் ஷாக்!

Author: Udayachandran RadhaKrishnan
27 January 2025, 11:58 am

தமிழ் சினிமாவில் பல வருடமாக முன்னணி நடிகையாக உள்ளவர் நடிகை திரிஷா. ஆரம்பத்தில் இருந்தே தற்போது வரை சினிமா மார்க்கெட்டில் உச்ச நடிகையாக உள்ளார்.

ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என முன்னணி நடிகர்களுடன் நடித்தது மட்டுமல்லாமல், அதன் பிறகு வந்த தலைமுறையினருடன் ஜோடி போட்டார்.

விஷால், விஜய் சேதுபதி, ஜெயம் ரவி என இவர் நடிக்காத நடிகர்களே இல்லை. உச்ச நடிகையாக உள்ள திரிஷா அதிர்ச்சியான முடிவை எடுத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

விஜய் போலவே, இனி சினிமாவில் நடிக்க வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த தகவலை பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.

இது குறித்து திரிஷா எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. ஒரு வேளை விஜய் ஆரம்பித்துள்ள தவெகவில் இணையலாம் என்ற செய்தியும் வலம் வந்தாலும், திரிஷா ஓய்வு எடுக்க போவதாக வந்த தகவல் அவரது ரசிகர்ளுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இது குறித்து திரிஷா கூறினால் உண்மை என்பது தெரியவரும்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி