குக் வித் கோமாளியில் இப்படியொரு ட்விஸ்ட்.. இவ்ளோ சீசன்’ல இப்படி நடந்ததில்லயே..!

Author: Rajesh
26 February 2023, 2:30 pm

சின்னத்திரையை பொருத்தவரை சீரியல் தொடர்கள் மட்டுமல்லாது நிறைய நிகழ்ச்சிகள் மக்கள் பேவரைட்டாக இருந்து வருகிறது. அதிலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை பேவரைட்டாக மனதில் இடம் பிடித்துள்ள நிகழ்ச்சி குக் வித் கோமாளி. 3 சீசன்கள் முடிவடைந்த நிலையில், இந்நிகழ்ச்சிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

ரக்ஷன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் ஷெஃப் தாமோதரன், ஷெஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர். இந்நிகழ்ச்சி கொரோனா லாக் டவுன் போது வைரலாகவும், மக்கள் ஸ்ட்ரெஸ் பஸ்டாராக இருந்தது. அதிலும் இதில் கோமாளிகளாக இருந்து வந்த புகழ், ஷிவாங்கி, பாலா, சுனிதா, மணிமேகலை மக்கள் பேவரைட். முதல் சீசனில் வனிதா விஜயகுமார், இரண்டாவது சீசனில் கனி, மூன்றாவது சீசனில் ஸ்ருஷ்டிகா வெற்றி பெற்றனர்.

cwc - updatenews360

தற்போது, குக் வித் கோமாளி 4வது சீசன் தொடங்கி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. நிகழ்ச்சியில் இருந்து ஏற்கனவே இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் எலிமினேஷன் ஆகியுள்ள நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் சுற்றில் இருந்து யார் வெளியேறப் போகிறார் என்ற பதற்றத்துடன் ரசிகர்கள் இருந்து வந்தனர். விஜே விஷால் அல்லது மைம் கோபி இருவரும் தான் டேஞ்சர் சோனில் இருந்தனர்.

இந்நிலையில், இறுதி கட்டத்தில் மோதிக்கொண்ட இருவரும் தங்கள் உணவிற்காக நடுவர்களிடம் பாராட்டை பெற்றதால் இந்த வாரம் யாருமே வெளியேறவில்லை, இருவரும் காப்பாற்றப்பட்டுள்ளனர். இதுவரை இறுதிவாரம் நெருங்கும் சமயத்தில் நோ எலிமினேஷன் இருந்து வந்த நிலையில், இந்தமுறை வித்தியாசமான முறையில் ஆரம்ப கட்டத்திலேயே நோ எலிமினேஷன் என அறிவித்துள்ளதால் போட்டியாளர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.

  • Nayanthara and Vignesh Shivan பாவம் விக்கி.. நயன்தாராவை திருமணம் செய்துவிட்டு கூஜா தூக்குறார்.. பிரபலம் விளாசல்!
  • Views: - 734

    14

    2