இந்த நட்சத்திர ஜோடியும் விவாகரத்தா? ஆனா இந்த காரணமெல்லாம் ரொம்ப TOO MUCH..!
Author: Vignesh25 March 2023, 5:30 pm
பாலிவுட்டின் நட்சத்திர ஜோடிகளான ரன்வீர் சிங்கும் தீபிகா படுகோனேவும் விவாகரத்து செய்ய உள்ளதாக இணையத்தில் தகவல் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நடிகர் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே 6 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். பின்னர் கடந்த 2018-ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாக மிகவும் பிரம்மாண்டமா நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
மும்பையில் ரன்வீரின் வீட்டில் இருவரும் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்கு பிறகும் தீபிகா படுகோனே பல படங்களை கையில் வைத்துக்கொண்டு பிசியாக நடித்து வருகிறார்.
நடிகை தீபிகா படுகோனே பாலிவுட் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை தீபிகா படுகோனே, தமிழில் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படம் மூலம் அறிமுகமானார். டாப் நடிகைகளின் வரிசையில் முதல் இடத்தில் இருப்பவர் தீபிகா படுகோனே தான். தற்போது பிரபாஸுடன் இணைந்து ப்ராஜெக்ட் கே படத்தில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் ஷாருக்கானுடன் பதான் படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியானது.
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ரன்வீர் சிங்குரம், தீபிகாவும் மனம் ஒத்து வாழவில்லை என்றும், இருவருக்கும் இடையே உறவில் இடைவெளி இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. இதனால் இருவரும் விரைவில் விவாகரத்து பெற்று பிரிந்துவிடுவார்கள் என்று பாலிவுட்டில் தகவல்கள் கசிந்து வருகிறது.
இதனிடையே, உடல் நிலைபாதிப்பு காரணமாக அண்மையில் தீபிகாவும் மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மும்பை பீச் கோட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்பும் பிராஜெட் கே படப்பிடிப்பு தளத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்டார். தீபிகா மற்றும் ரன்வீர் சிங்கின் பிரிவால் தொடர்ந்து தீபிகா, மனபோராட்டதை சந்தித்து வருவதால்தான் அவர் உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வருகிறது.
மேலும் ஒருவருக்கொருவர் விடாமல் எப்போதும் கைகோர்த்தபடி , கண்களால் பேசிய படி மேடையில் எப்போதும் ரன்வீர் தீபிகாவை பார்த்து ப்ரபோஸ் பண்ணுவதும் முத்தம் கொடுப்பதும் பார்க்கவே ரசிக்கும் படியாக இருக்கும் நிலையில், இந்த ஜோடி குறித்து தற்போது வெளியான ஒரு வீடியோ அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பலர் தீபிகா செயலை கண்டித்தும் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
#DeepikaPadukone #RanveerSingh weird chemistry at event pic.twitter.com/cXO6RRRvYQ
— Harminder 🍿🎬🏏 (@Harmindarboxoff) March 24, 2023
மேலும் சமூக வலைதளத்தில் பிஸியாக இருக்கும் தீபிகா பதிவிடும் எந்த ஒரு புகைப்படமானாலும் முதல் ஆளாக லைக்குகள் மற்றும் ஹார்ட் சிம்பள்களை பதிவிடுவது ரன்வீரின் வழக்கமாக வைத்துள்ளாராம். ஆனால் சில தினங்களாக ரன்வீர் சிங்கிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை என்பதால், இதனாலேயே இருவருக்கும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்பட்டு வருகிறது.