அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங் கவுண்டமணி. சமூக அக்கறைகொண்ட விஷயங்களைகூட போகிற போக்கில் தனது வசனத்தால், உடல்மொழியால் விதைத்து செல்லும் வித்தை கவுண்டமணிக்கு கைவந்த கலை. தமிழக மக்களின் நகைச்சுவை விருந்தாகவும் மருந்தாகவும் எப்போதும் தனது பங்களிப்பை செய்துவரும் கவுண்டமணி நகைச்சுவை அரசன்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக திகழ்ந்த கவுண்டமணிக்கு, தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இவர் கதாநாயன்களுக்கு இணையான சம்பளத்தை பெற்று வந்தவர். கவுண்டமணி பேரும் புகழோடு வாழ்ந்து வந்துள்ளார்.
இதனிடையே, பல படங்களில் கவுண்டமணியின் வசனம் காமெடியை தாண்டி இரட்டை அர்த்தங்களுடன் சேர்ந்து தான் இருக்கும். மேலும் உருவ கேலி செய்வது, மட்டம் தட்டும் விதமான வசங்களை சேர்த்து கவுண்டமணி பேசுவது வழக்கம். அவரின் காமெடியை ரசிக்காதவர்களே இருக்க மாட்டார்கள் என்பது போல் ரியல் வாழ்க்கையிலும் அவரது ஹூமர் சென்ஸ் நன்றாக இருக்குமாம்.
இவர், பெரும்பாலும் சத்யராஜ், மணிவண்ணன் போன்றவர்களுடன் அதிகமாக நேரம் செலவிட்டும் நடிக்கவும் செய்து வந்திருக்கிறார். கவுண்டமணியின் காமெடிக்கு ரஜினிகாந்த், பிரபு கூட தன்னை மறந்து சிரித்து விடுவார்களாம்.
கவுண்டமணியுடன் ஒரு சில நடிகர்களுடன் சேர்ந்தால் அவர்களது கெமிஸ்ட்ரி வேறலெவலில் ஒர்க் அவுட் ஆகிவிடும். அப்படிப்பட்ட ஒரு நடிகர் தான் சத்யராஜ். கவுண்டமணி மற்றும் சத்தியராஜ் இருவரும் சேர்ந்தால் படத்தில் மட்டுமல்ல ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலப்பாக மாறிவிடும்.
இந்நிலையில், பல படங்களில் கவுண்டமணியுடன் நடித்த நடிகை சுகன்யா ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ‘நீங்கள் திரையில் பார்க்கும் கவுண்டமணி வேறுஎன்றும், நிஜத்தில் சினிமாவை பற்றி அவ்வளவு தெரிந்து வைத்திருக்கும் நடிகர் கவுண்டமணி எனவும், குறிப்பாக ஹாலிவுட் படங்களை பற்றி வியந்து பேசுவார் என நடிகை சுகன்யா தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து கூறுகையில், சில படங்களின் பெயரை சொல்லி ‘இந்த படம் பாரும்மா.. ஹீரோ சூப்பரா நடிச்சிருப்பான்’ என சொல்லுவார்’ எனவும், கவுண்டமணி தமிழ் திரைப்படங்களில் நடிப்பதோடு சரி. ஆனால், அதிகம் பார்க்கமாட்டார் எனவும், கவுண்டமணி அதிகம் பார்ப்பது ஹாலிவு படங்கள் மட்டுமே என சத்தியராஜே கூறியதாக சுகன்யா பேசியுள்ளார்.
மனதில் வாழும் கலைஞன் சின்ன கலைவாணர் என்று புகழப்படும் விவேக் இந்த உலகத்தை விட்டுச் சென்றிருந்தாலும் அவரது நினைவுகள் தமிழ்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக லைவர் தொல் திருமாவளவன், அதிமுகவை வெகுவாக பாராட்டியுள்ளார். இதையும் படியுங்க: வக்பு மசோதாவுக்கு கனிமொழி,…
மெகா வசூல் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “டிராகன்” திரைப்படம் வேற…
அவ்வப்போது பிரபலங்கள் ஏதாவது ஒரு கருத்தை செல்லி சர்ச்சையில் சிக்கிக்கொள்வது வழக்கம். அந்த வரிசையில் தற்போது சின்னத்திரை நடிகை சிக்கியுள்ளார்.…
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே உள்ள தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அதிமுக மாநிலங்களவை எம்பி மு.தம்பிதுரை அவர்கள் பத்திரிகையாளர்களை சந்தித்து…
பராசக்தி ஹீரோ சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் “பராசக்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படத்தின்…
This website uses cookies.