ஆணவத்தில் கணவரை மட்டம் தட்டி பேசிய சுஹாசினி.. நேர்காணலில் முகம் சுளித்த மணிரத்னம்..!
Author: Vignesh24 April 2023, 11:45 am
80 காலகட்டத்தில், நடிகை சுஹாசினி பிரபல நடிகையாக வலம் வந்தார். இவர் கோபுரங்கள் சாய்வதில்லை, சிந்து பைரவி போன்ற படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி பல விருதுகளை குவித்தார்.
இதனிடையே, சுஹாசினி 1988 -ம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொண்டு, தற்போது சுஹாசினி ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.
மணிரத்னம் யாரிடமும் உதவி இயக்குநராக பணியாற்றாமல், நேரடியாக தன் முதல் படமாகிய பல்லவி அனுபல்லவி படத்தினை இயக்கினார். முதலில் சில படங்கள் வெற்றிபெறாவிட்டாலும் அவர் ஐந்தாவதாக இயக்கிய மௌன ராகம் (1986) பெரும் வெற்றியும், பாராட்டுகளும் பெற்றது.
தமிழ் திரை உலகில் தனக்கான இடத்தை மணிரத்னம் பெற்றார். அடுத்து இயக்கிய நாயகன் (1986) இதுவும் ஒரு பெரும் வெற்றிப்படமானது. இவருடைய தீவிரவாத எதிர்ப்புப் படங்களான ரோஜா (1992), பம்பாய் (1995), உயிரே (1998) ஆகியவை பெரிதும் பேசப்பட்டன.
மணிரத்னம் ஆறு தேசிய விருதுகள், ஆறு தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள், மற்றும் மூன்று பாலிவுட் பிலிம்பேர் விருதுகள் உட்பட பல விருதுகள் பெற்றிருக்கிறார். மணிரத்னம் மெட்ராஸ் டாக்கீஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தை சொந்தமாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் நடிப்பில் பிரம்மாண்ட வரலாற்று திரைப்படமாக உருவாகியுள்ளது பொன்னியின் செல்வன்.
இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தமிழ் திரையுலகமே எதிர்பார்த்து காத்து இருக்கிறது. இப்படம் இன்னும் சில தினங்களில் வெளியாக இருக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் இப்படத்தின் முன்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, சமீபத்தில் சுஹாசினி மேடை ஒன்றில் மணிரத்தினம் குறித்து கூறியபோது, அதில் அவர், தான் மணிரத்தினத்தை திருமணம் செய்து கொள்லும் நேரத்தில் தான் முன்னணி நடிகையாக இருந்ததாகவும், அப்போது அவர் சில படங்களை தான் இயக்கி இருந்தார்.
அந்த சமயத்தில் பொருளாதார ரீதியாக வசதியுடன் தான் இருந்தேன் என்றும் ஆனால் மணிரத்தினம் வங்கி கணக்கில் வெறும் 15000 மட்டுமே இருந்தது என்று சுஹாசினி தெரிவித்து இருந்தார். சினிமா கலைஞர்கள் எல்லோருமே தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் அவர்கள் பட்ட கஷ்டங்களை பற்றி பேசுவது என்பது சகஜமான ஒன்றுதான்.
இவரின் இந்த பேச்சில் ஆணவமாக தெரிந்ததாகவும், இவரின் பேச்சு பலரையும் முகம் சுளிக்கும் விதமாக அமைந்ததாக நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.