Periods முடிந்ததும் கணவருக்கு இப்படிதான் சிக்னல் கொடுப்பேன் – வீடியோவுடன் வெளியிட்ட சுஜா வருணி!
Author: Rajesh12 February 2024, 2:25 pm
சுஜா வருணி விளம்பரங்களில் நடித்து அதில் கிடைத்த வருமானத்தை வைத்து தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துவந்தார். மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சுஜா வருணி சினிமாவில் ஆரம்பத்தில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், கவர்ச்சியாக நடனமாடும் பாடல் நாயகியாகவும் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் இதுவரை தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிப் படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் நிறைய குவியத்துவங்கியது. இவர் நடிப்பில் மிளகா, பென்சில் ,கிடாரி உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இதனிடையே இவர் சிவாஜி தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவருக்கு ஒரு மகன் இருக்கிறார். எப்போதும் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக எதையேனும் பதிவிட்டு வரும் சுஜா வருணி சமீபத்தில் தனது கணவருடன் சேர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் Periods முடிந்ததும் கணவருக்கு இப்படிதான் சிக்னல் கொடுப்பேன் என்று வீடியோ வெளியிட அதற்கு அவர் கணவரின் ரியாக்ஷன் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.