உச்ச நடிகரின் படத்தில் அட்ஜெஸ்ட் செய்த சுகன்யா.. உண்மையை உடைத்த பிரபல தயாரிப்பாளர்..!

Author: Vignesh
6 June 2024, 12:23 pm

பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து 90களில் முன்னணி பிரபல நடிகையாக சுகன்யா வலம் வந்தவர். நடிகை சுகன்யா 1992 -ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் வெளியான “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.

suganya-updatenews360

இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சுகன்யா ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை 2002 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.

suganya-updatenews360

இதனிடையே, திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிகை சுகன்யா நடித்துள்ளார். ஆனால், கணவருக்கோ சுகன்யா நடிப்பது பிடிக்கவில்லை என்பதால், திரைப்படம் மற்றும் டிவியில் நடிக்கக்கூடாது என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை போட்டது மட்டும் இல்லாமல், எக்குத்தப்பான சில கேள்விகளையும் கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுகன்யா அவரை விவாகரத்து செய்துள்ளார்.

suganya-updatenews360

இந்த கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு நடிகை சுகன்யா இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் தனியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, சுகன்யா மீண்டும் சினிமாவில் ஒரு வலம் வர இருக்கிறார். ஆனால், இந்த முறை நாயகியாக இல்லை. பாடலாசிரியராக தான் மலையாளத்தில் தமிழ் காட்சிகளில் வரும் நிலையில் இயக்குனர் சுரேஷ்பாபு என்பவரும் இசையமைப்பாளர் சரத் என்பவரும், சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார்.

suganya-updatenews360

இந்நிலையில், குணச்சித்திர ரோலில் நடித்தவரும் சுகன்யா பற்றி பிரபல தயாரிப்பாளர் டி சிவா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஒரு சம்பவத்தை பகிர்ந்திருக்கிறார். அதில், சுகன்யா பண்ண அந்த விஷயத்தை ஜூனியர் ஆர்டிஸ்ட் கூட பண்ண மாட்டாங்க, சின்ன மாப்பிள்ளை படத்தின் ஷூட்டிங், கோபிசெட்டிபாளையத்தில் நடந்தது. எல்லோரும் தங்குவதற்கு லார்ஜ் எல்லாம் புக் பண்ணிட்டு அப்போது இன்னொரு படம் நடுவில் புகுந்து ரூம்ஸ் நான் நினைத்து போல் கிடைக்கவில்லை. நார்மல் ரூம் கூட கிடைக்காமல் கட்டி முடித்த ஒரு ரூம் கொடுத்தார்கள். ஜன்னல் கூட போடவில்லை வேறு வழியில்லாமல் அந்த ரூமை சுகன்யாவுக்கு கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். சுகன்யாவின் அப்பா, அம்மாவை கூட்டிச்சென்று கூட காமித்தேன் நாங்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்று அந்த ஜன்னல்களில் சேலை வேட்டியை வைத்து மறைத்து தங்கி அந்த படத்தை முடித்துக் கொடுத்தார் சுகன்யா என்று தயாரிப்பாளர் டி சிவா சுகன்யா குறித்து பெருமிதமாக தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 288

    0

    0