பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து 90களில் முன்னணி பிரபல நடிகையாக சுகன்யா வலம் வந்தவர். நடிகை சுகன்யா 1992 -ம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் வெளியான “புது நெல்லு புது நாத்து” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களில் நடித்துள்ளார். நடிகை சுகன்யா ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை 2002 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணம் வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்தது.
இதனிடையே, திருமணத்திற்கு பின் சுகன்யா ஒரு சில தொலைக்காட்சித் தொடர்களில் நடிகை சுகன்யா நடித்துள்ளார். ஆனால், கணவருக்கோ சுகன்யா நடிப்பது பிடிக்கவில்லை என்பதால், திரைப்படம் மற்றும் டிவியில் நடிக்கக்கூடாது என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை போட்டது மட்டும் இல்லாமல், எக்குத்தப்பான சில கேள்விகளையும் கேட்டுள்ளார். இதனால் மனவேதனை அடைந்த சுகன்யா அவரை விவாகரத்து செய்துள்ளார்.
இந்த கசப்பான நிகழ்வுகளுக்கு பிறகு நடிகை சுகன்யா இரண்டாவது திருமணத்தை பற்றி யோசிக்காமல் தனியாகவே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சுகன்யா மீண்டும் சினிமாவில் ஒரு வலம் வர இருக்கிறார். ஆனால், இந்த முறை நாயகியாக இல்லை. பாடலாசிரியராக தான் மலையாளத்தில் தமிழ் காட்சிகளில் வரும் நிலையில் இயக்குனர் சுரேஷ்பாபு என்பவரும் இசையமைப்பாளர் சரத் என்பவரும், சுகன்யா தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து அவர் ஒரு பாடலை எழுதிக் கொடுத்துள்ளார்.
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
மதுரை மாநகர் கீரைத்துறை காவல்துறையினருக்கு வில்லாபுரம் கிழக்கு தெரு முனியான்டி கோவில் அருகில் உள்ள கருவேலங்காட்டுக்குள் கஞ்சா கடத்தப்படுவதாக கடந்த…
களைகட்டும் கேங்கர்ஸ் சுந்தர் சியும் வடிவேலுவும் இணைந்து கலக்கிய “கேங்கர்ஸ்” திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. கிட்டத்தட்ட…
நடிகர் பாக்யராஜ் முன்னணி இயக்குநர், நடிகராக 80 மற்றும் 90களில் திகழ்ந்தார். இவர் உடன் நடித்த நடிகை பூர்ணிமா ஜெயராமை…
பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணைப்பகுதிக்கு சென்னை பூந்தமல்லி சவிதா பிசியோதெரபி கல்லூரியிலிருந்து நான்காம் ஆண்டு படித்து வரும் 25க்கும் மேற்பட்ட…
சிக்ஸ் பேக் வைத்த முதல் நடிகர் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி…
This website uses cookies.