அவரு ஒரு பெண்ணா கூட மதிச்சதே இல்லை.. பிரபல நடிகருடனான ரகசியத்தை உடைத்த சுலக்சனா..!
Author: Vignesh20 May 2023, 6:00 pm
சுலக்சனா இந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையாவார். இவர் தென்னிந்திய மொழிகளான தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் நடித்துள்ளார்.
காவியத் தலைவி திரைப்படம் மூலம் இரண்டரை வயதிலிருந்து சுலக்சனா நடிக்கத் தொடங்கினார். 1980 இல் சுபோதையம் என்ற தெலுங்குப் படத்தில் நடிகர் சந்திர மோகனோடு இணைந்து நடித்தார். இவர் தூறல் நின்னு போச்சு என்னும் திரைப்படம் மூலமாக தமிழில் அறிமுகமானர்.
இவர் 450க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்னர் ம.சு.விசுவநாதன் மகனான கோபிகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர்.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சுலக்சனா தனது வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் நடிகை சுலக்சனா, தானும் கார்த்தி படத்தில் நடித்து வந்த போது தன்னிடம் அவர் உன்னை பார்த்த பொண்ணு என்கிற ஃபீலிங் வரவில்லை என்றும், அது மட்டுமில்லாமல் எப்போதும் தன்னை நீ எனக்கு ஒரு பாய் ஃப்ரெண்ட் என்று சொல்லி கிண்டல் செய்வார் என்று சுலக்சனா தெரிவித்துள்ளார்.