காந்த கண்ணழகியாக வசீகர பார்வை கொண்டு 80ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை சொக்கி இழுத்தவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. பிரபல இயக்குனர் வினு சக்கரவர்த்தியால் அறிமுகம் செய்யப்பட்ட இவர் “வண்டிச்சக்கரம்” என்கிற திரைப்படத்தில் சிலுக்கு என்கிற சாராயம் விற்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.
முதல் படத்தின் பெயரே இவருக்கு சினிமாவில் நிலைத்து விட்டது. அதை அடுத்து சில்க் ஸ்மிதாவாக ரவுண்ட் கட்டி பலம் வந்தார். குறிப்பாக தமிழ், தெலுங்கு ,கன்னடம், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட பலமொழி திரைப்படங்களில் இதுவரை 450-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்ற நடிகையாக வலம் வந்தார்.
இதனிடையே அவர் 1996 ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணம் அடைந்தார். இன்று வரை இவரது மரணத்திற்கான காரணங்கள் மர்மமாகவே பார்க்கப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பல ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோயின் ஆக இருந்து வந்த இவர் பல நட்சத்திர பிரபலங்களுக்கும் கனவு நாயகியாக இருந்திருக்கிறார்.
சில ஸ்மிதாவை பல பேர் காதலித்திருக்கிறார்கள் என்று சொல்லி தான் நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் சில்க் ஸ்மிதாவே பிரபல நடிகையின் கணவரை காதலித்ததாக அந்த நடிகையே பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். ஆம் நடிகை சுலோக்ஷனா சமீபத்திய பேட்டி ஒன்றில் சில்க் ஸ்மிதா குறித்து பேசினார் .
அப்போது சில்க் ரொம்பவே பாசமான பெண்ணு… அவங்க நடித்த கதாபாத்திரத்துக்கும் அவங்களோட நிஜ கேரக்டருக்கும் சம்பந்தமே இருக்காது. சில்க் என்னிடம் கூட ஒரு முறை “நான் உன் கணவரை தான் முதலில் லவ் பண்ணேன். ஆனால் நீ அதுக்குள்ள கல்யாணம் பண்ணிட்ட அப்படின்னு என்கிட்ட சொல்லி இருக்காங்க.
உடனே நானும் சரி அப்படியே இருக்கட்டும் “நீ வேணா இப்ப லவ் பண்ணிக்கோ” அப்படின்னு சொல்லி இருக்க அதற்கு சிலுக்கு வேண்டாம் என சொல்லிடுவாங்க. இந்த அளவுக்கு எங்களுடைய நட்பு அவ்வளவு அழகா இருந்துச்சு இது என்னுடைய கணவருக்குமே தெரியும். என்கிட்டே சில்க் ஸ்மிதா என்னுடைய கணவர் பத்தி அப்படி பேசும் போது கூட எனக்கு தப்பா தெரியாது. அந்த அளவுக்கு நாங்க சிறந்த தோழிகளா இருந்தோம் என அவர் கூறினார்.
வக்ஃபு சட்ட திருத்த மசோதா மக்களவை மற்றும் மாநிலங்கலவையில் நிறைவேற்றப்பட்டதை கண்டித்து வேலூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்…
சச்சின் ரீரிலீஸ்… விஜய் நடிப்பில் 2005 ஆம் ஆண்டு வெளியான “சச்சின்” திரைப்படம் 90ஸ் கிட்ஸின் மிகவும் விருப்பத்திற்குரிய திரைப்படமாக…
2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. குறிப்பாக முதல் போட்டியில் மும்பை அணியுடன்…
அபார முயற்சி, ஆனால்? ரஜினிகாந்தை நாம் திரையில் பல கதாபாத்திரங்களில் ரசித்து பார்த்திருப்போம். ஆனால் அனிமேஷனில் ரஜினிகாந்தை கொண்டு வந்த…
வக்பு வாரிய சட்டத்தருத்த மசோதா கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் ஒரு நிறைவேற்றப்பட்டது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும்…
ரொமான்டிக் ஹீரோ டூ ஆக்சன் ஹீரோ சூர்யா தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானதில் இருந்து காதலை மையமாக வைத்து உருவான…
This website uses cookies.