டபுள் மீனிங் அர்த்தத்தில் பேசி சில்மிஷம் செய்தார் – கமல் ஹாசன் குறித்து 70 வயது நடிகை பேட்டி!

Author:
26 August 2024, 5:22 pm

ஒரு காலகட்டத்தில் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் இளம் வயது நடிகைகளாக பல ஹீரோக்களுக்கு ஜோடி போட்டு நடித்து காதலியாகவும் மனைவியாகவும் நடித்து ரொமான்ஸில் பின்னிப் பெடல் எடுத்தவர்கள் பின்னாலில் வயது ஏற ஏற அதே ஹீரோவுக்கு அம்மாவாகவும் அக்காவாகவும் குணசித்திர வேடங்களிலும் நடிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் .

இது பெரும்பாலும் நடிகைகளுக்கு தான் நடக்கிறது. ஆம் அப்படி ஒரு அனுபவத்தை தான் பிரபல நடிகையான சுமித்ரா பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசியிருக்கிறார். அதாவது நடிகை சுமித்ரா கமல் ரஜினி போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் உள்ளிட்ட பழமொழிகளில் இதுவரைக்கும் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.

நடிகை சுமித்ரா சிவாஜி கணேசன் , சிவகுமார், ரஜினிகாந்த், கமலஹாசன் இப்படி பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்திருப்பார். 70 ஸ் மற்றும் 80ஸ் காலகட்டத்தில் பிரபலமான ஹீரோயின் ஆக வலம் வந்த இவர் 90ஸ் காலகட்டத்தில் அம்மா நடிகையாக நடித்து பெரும் புகழ் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

kamal hassan

இதன் நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் கமலுடன் நடித்த அனுபவத்தை குறித்து பகிர்ந்து கொண்டார். அப்போது சிங்காரவேலன் படத்தில் கமலுக்கு ஜோடியாக நான் அடித்திருப்பேன். அந்த படத்தின் ஒரு காட்சியில் அம்மா அம்மா என்று ஓடி வர வேண்டும். ஆனால் கமல் சுமி சுமி என்று ஓடி வருவார்.

உடனே நான் அவரை அழைத்து இந்த படத்தில் நான் உனக்கு அம்மா…என்னை அம்மா என்று கூப்பிட்டு என சொல்லுவேன் அதற்கு கமல் எனக்கு காதலியா நடிச்ச பொண்ண இப்ப எப்படி அம்மான்னு கூப்பிடறது அப்படின்னு என்கிட்ட கேட்டு உடனே இயக்குனரை பார்த்து கோபப்பட்டார்.

அந்த அளவுக்கு சில்மிஷம் பிடித்தவர் கமல் ஹாசன். அதுமட்டுமில்லாமல் சூட்டிங் ஸ்பாட்டில் அவர் பேசுற வார்த்தை எல்லாமே இரட்டை அர்த்த வார்த்தைகளாக தான் இருக்கும். எனவே அவர் இருக்கிற இடத்தை கண்டிப்பா பெனாயில் ஊத்தி கழுவிட வேண்டும். அவ்வளவு மோசமா பேசுவாரு கமல். ஆனால் அது கேக்குறதுக்கு அவ்வளவு அருவருப்பா இருக்காது ஜாலியாக தான் இருக்கும் என நடிகை சுமித்ரா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

  • Surya Clash With Ajith அஜித்துக்கு எதிராக களமிறங்கும் சூர்யா.. ஒரு கை பார்க்க முடிவு!!
  • Views: - 271

    0

    0