சீரியலில் மட்டுமில்ல நிஜத்துலயும் இதை பண்ணுவாங்க.. மீடியாவில் இருந்து விலகிய சன் நியூஸ் மோனிகா அவரே வெளியிட்ட உண்மை..!
Author: Vignesh30 December 2022, 6:00 pm
சன் தொலைக்காட்சி தான் சில வருடங்களுக்கு முன்பு மக்கள் விரும்பும் நம்பர் 1 தொலைக்காட்சியாக இருந்தது. ‘சன் செய்திகளுக்காக உங்கள் மோனிகா’ என்ற இவரது குரலை கண்டிப்பாக நாம் மறந்திருக்க மாட்டோம். வானிலை செய்தி வாசிப்பாளர்களில் பிரபலமானவர் மோனிகா.
எனவே நடிப்பு, தொகுப்பாளர்க வேலை என என்ன செய்ய நினைத்தாலும் அந்த டிவியில் பணிபுரிய தான் முதலில் ஆசைப்படுவார்களில் இவரும் ஒருவராக இருந்தார்.
அப்படி அந்த தொலைக்காட்சியில் வானிலை செய்தி வாசிப்பாளராக இருந்து கலக்கிய மோனிகா. பின்னர் சமூக வலைதள பக்கம் வந்தவுடன் அவரது டிராக் மாற சீரியல், சினிமா பக்கம் மோனிகா வருவதை தவிர்த்த இவர், மாறாக சமூக பிரச்சனை, அரசியல் போன்ற விஷயங்களை தைரியமாக பேசி வீடியோக்கள் வெளியிட ஆரம்பித்தார்.
அப்படி அவர் சில அரசியல் விஷயங்கள் குறித்து பேசியதால் தனது மகனை வைத்து மிரட்டல்விடும் அளவிற்கு சில விஷயங்கள் நடக்க இப்போது அரசியல் பேசுவதை நிறுத்தியுள்ளார்.
தன்னுடைய கணவர் ஒரு முக்கியமான பணியில் இறங்கி இருப்பதாகவும், அவருக்கு உதவலாம் என்று நினைத்து தான் சீரியல், சினிமா பக்கம் தன்னால் நடிக்க முடியாமல் போனதாகவும், தன்னுடைய கணவர் அரசியல் தொடர்பான வேலையை செய்து வருவதாகவும் தெரிவித்த இவர், பிரசாந்த் கிஷோர் பற்றி அனைவரும் கேள்விப்பட்டு இருப்போம், அவர் பண்ற பொலிடிகல் பிராண்டிங் ஃபீல்டுலில் தான் தன்னுடைய கணவரும் இருப்பதாகவும், ஒரு மனைவியா அவரது வேலைக்கு உதவிகளைச் செய்து வருவதாக ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.