விஜய்க்கு ஆதரவாக சன் பிக்சர்ஸ் போட்ட பதிவு.. இது முதலமைச்சருக்கு தெரியுமா?

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2024, 1:39 pm

விஜய்க்கு ஆதரவாக சன் பிக்சர்ஸ் போட்ட பதிவை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நடிகர் விஜய் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான படம் சர்கார். படம் வெளியானது பெரிய சர்ச்சை வெடித்தது.

காரணம் படத்தில் கலைஞர் டிவி, மிக்சி, கிரைண்டர் போன்ற திமுக அறிவித்த இலவச பொருட்களை ஒரு விரல் புரட்சி என்ற பாடலில் இயக்குநர் போட்டு உடைப்பது போன்ற காட்சி அமைந்திருக்கும். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து படம் ரிலீசான தியேட்டர் முன்பு திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

ஒரு வழியாக அந்த காட்சிளை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதற்கும் படத்தின் தயாரிப்பாளர் திமுகவை சேர்ந்த சன் பிக்சர்ஸ்தான்.

படம் வெளியாகி விஜய் கேரியரில் மிகப்பெரிய முக்கிய படமாக அமைந்தது. 100 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான படம், சுமார் 250 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

அரசியல் பேசும் படமாக விஜய் தேர்வு செய்தால் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில் இதே நாளில்தான் 2018ஆம் ஆண்டு படம் வெளியானது.

சுமார் படம் வெளியாகி 6 வருடங்கள் ஆனதை யொட்டி தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் 6 YEARS OF SARKAR என்ற வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சர்கார் படம் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்பதை உணர்த்தும் படமாகவும், நிச்சயமாக அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக அமைந்தது.

அதே போல விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தியும் விட்டார். குறிப்பாக திமுக, பாஜகவுக்கு எதிராக விஜய் பேசியது அரசியல் கட்சியினரிடையே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. திமுகவினர் தவெகவை கழுவி ஊற்றி வரும் நிலையில், சன் பிக்சர்ஸ் இந்த வேலையை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 362

    0

    0