முடிவுக்கு வரும் சூப்பர் சீரியல்.. அதுக்குள்ள END CARD :புலம்பும் இல்லத்தரசிகள்!! கிளைமாக்ஸ் போட்டோ இதோ..!
Author: Vignesh21 February 2023, 10:30 am
வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது
அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.
ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.
இதில் காலை மதியம் இரவு வரை புதுப்புது சீரியல்களை போட்டு மக்கள் மனதில் எளிதாக இடம்பிடித்து விடுகின்றன. அதில் கயல், எதிர் நீச்சல், அருவி, இனியா, இலக்கியா, கண்ணான கண்ணே, சுந்தரி, அன்பே வா, தாலாட்டு என லிஸ்ட் பெரியது.
இதில் இரவு நேரத்தில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு தனி மவுசு. அப்படி அப்பா மகள் பாசத்தை உணர்த்தும் தொடர்தான் கண்ணான கண்ணே. இந்த சீரியல் பாடலுக்கு என்று ஒரு கூட்டமே உள்ளது.
அந்த சீரியல் முடிவுக்கு வர உள்ளதாக நாடகக்குழு வே அறிவித்துள்ளது. இதானல் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதே போல மதியம் ஒளிபரப்பாகி வரும் அபியும் நானும் தொடரும் கிளைமாக்ஸ் நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது
இதனால்தான் மலர் என்ற புதிய நாடகமும் ஒளிபரப்பாக உள்ளது என தற்போது ப்ரோமோவும் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
இதனிடையே, கண்ணான கண்ணே முடிவுக்கு வருகிறது என ஒரு வாரத்திற்கு முன்பே தகவல் வெளியான நிலையில், தற்போது கிளைமாக்ஸ் ஷூட்டிங் இன்று நடந்து முடிந்து இருக்கிறது. கடைசியாக மொத்த படக்குழுவினரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோ தற்போது வெளியாகி இருக்கிறது.
இணையத்தில் வைரல் ஆகி வரும் புகைப்படங்கள் இதோ..