TRP-யில் படுமோசம்.. என்ன செஞ்சாலும் வேலைக்கு ஆகல.. 3- ஃபேவரட் சீரியல்களை நிறுத்தப்போகும் Sun Tv..!

Author: Vignesh
12 December 2023, 3:00 pm

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது. அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன.

suntv serials

ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி. சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தான் கூறுவார்கள். ஆனால் இப்போது அனைத்து தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

suntv serials

இந்நிலையில், டிஆர்பி ரேட்டிங் பெற்று தொடர்ந்து டாப் 5 லிஸ்டில் அனைத்து இடங்களையும் சன் டிவியின் சீரியல்கள் பிடித்து வருகிறது. தற்போது, சன் தொலைக்காட்சி சீரியல்களில் ஒரு முடிவு எடுத்துள்ளார்கள். அதாவது, TRP மிகவும் குறைந்து இருக்கும் 3 தொடர்களை முடிக்க முடிவு செய்துள்ளார்களாம். எந்தெந்த தொடர்கள் என்றால், அன்பே வா, மிஸ்டர் மனைவி மற்றும் செவ்வந்தி தொடர்கள் தானாம். ஆனால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்கின்றனர்.

suntv serials
  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ