அடக் கொடுமையே.. ரவுடியிடம் சரமாரியாக அடி வாங்கிய விஜய்யின் நண்பர்.. உண்மையில் நடந்த சம்பவம்..!

Author: Vignesh
2 March 2024, 7:04 pm

வீட்டில் உள்ள இல்லத்தரசிகளை கட்டிப்போட்டு வைத்துள்ளது மெகா சீரியல்கள். காலையில் ஆரம்பித்த சீரியல்கள் இரவு 11 மணி வரை நீடித்துக் கொண்டே இருக்கிறது அதுவும் சீரியலுக்கு பிரபலமான சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி, கலர்ஸ், ஜீ டிவி என எல்லா டிவி சேனல்களும் தற்போது சீரியல் என்ற ஆயுதத்தை கையில் எடுத்து டிஆர்பியை எகிற வைத்து வருகின்றன. ஆனால் ஆரம்பத்தில் எப்படி சீரியல்களால் இல்லதரசிகளை கட்டிப்போட்டதோ இன்னும் அப்படியே மாறாமல் உள்ளது சன் டிவி.

சின்னத்திரையில் முன்னணி நடிகர்களாக வளம் வருபவர்கள் ஸ்ரீகுமார் மற்றும் சஞ்சீவ் இவர்கள் இருவருமே நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரியாத விஷயம். நடிகர் சஞ்சீவ் விஜய்க்கு மிக நெருங்கிய நண்பர் என்பதை மட்டுமே நாம் அறிவோம்.

sri kumar

இவர்கள் இருவரும் குழந்தை பருவத்தில் இருந்து நண்பர்களாக இருந்துள்ளனர். தற்போது, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல சீரியலில் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீகுமார் இணைந்து நடித்து வருகிறார்கள். மேலும், விரைவில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள லக்ஷ்மி என்னும் சீரியலில் சஞ்சீவ் கதையின் நாயகனாக களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

sri kumar

இந்நிலையில், ஒருமுறை ரவுடிகள் சிலர் நடிகர் ஸ்ரீகுமாரிடம் சண்டை போட்டிருந்த சமயத்தில், அப்போது ஸ்ரீ குமாரின் கையில் கத்தியால் வெட்டியுள்ளார்கள். இதன் பின்னர் சஞ்சீவ் அந்த இடத்திற்கு வந்து ஸ்ரீ குமாரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று உதவியுள்ளார். இது குறித்து, காவல் நிலையத்தில் புகார் எல்லாம் கொடுத்து விட்டார்களாம். ஆனால், இதன் பின்னர் அந்த ரவுடி கும்பல் மீண்டும் ஸ்ரீ குமாருக்கு பதிலாக சஞ்சீவை மடக்கி பிடித்து அடித்துள்ளார்கள். அந்த ரவுடிகளிடம் செம அடி வாங்கினாராம் சஞ்சீவ் இந்த விஷயத்தை ஸ்ரீகுமார் பேட்டி ஒன்றில் பங்கேற்கையில் தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 216

    0

    0